சாலைப் போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைத்துறை அமைச்சகம்
azadi ka amrit mahotsav

சாலைப் பாதுகாப்புத் திட்டம்

प्रविष्टि तिथि: 16 MAR 2023 2:19PM by PIB Chennai

இந்தியாவில் சாலைப் பாதுகாப்பு திட்டத்தை தீவிரமாக செயல்படுத்தி வருவதன் காரணமாக சாலை விபத்து இறப்பு விகிதம் குறைந்துள்ளது.

இறப்புகளுக்கான இழப்பீடு கோரிவரும் புகார்களும் குறைந்துள்ளன. 2017-18 ம் ஆண்டில் 1252 கோரிக்கைகளில், ரூ.238.62 லட்சம் இழப்பீடாக வழங்கப்பட்டுள்ளது. இது படிப்படியாக குறைந்து 2022-23 நிதியாண்டில் பிப்ரவரி மாதம் வரை 78 பேருக்கு 147 லட்சம் ரூபாய் வழங்கப்பட்டுள்ளது.

தேசிய நெடுஞ்சாலைகளில் 2021ம் ஆண்டு 56,007 விபத்துகள் நடந்துள்ளன. இதில் தமிழகத்திலில் மட்டும் 5263 விபத்துகள் நிகழ்ந்துள்ளன. புதுச்சேரியில் 87 விபத்துகள் நடந்துள்ளன.

மக்களவையில் மத்திய சாலைப் போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைத் துறை அமைச்சர் திரு. நிதின் கட்கரி எழுத்து மூலம் அளித்த பதிலில் இந்த விவரங்களை தெரிவித்துள்ளார்.

***

SRI/PKV/SG/KRS


(रिलीज़ आईडी: 1907687) आगंतुक पटल : 169
इस विज्ञप्ति को इन भाषाओं में पढ़ें: English , Urdu