குறு சிறு மற்றும் நடுத்தர தொழில் துறை அமைச்சகம்
குறு, சிறு நிறுவனங்கள் தொகுப்பு மேம்பாட்டுத் திட்டம் தமிழகத்தில் 97 திட்டங்களுக்கு அனுமதி
Posted On:
16 MAR 2023 2:18PM by PIB Chennai
மத்திய குறு,சிறு நடுத்தர நிறுவனங்கள் அமைச்சகம் பொதுவசதி மையங்கள் ஏற்படுத்தும் 212 திட்டங்கள் உட்பட 540 திட்டங்களுக்கு ஒப்புதல் வழங்கியுள்ளது. மேலும் குறு,சிறு நிறுவனங்கள் தொகுப்பு மேம்பாட்டுத் திட்டத்தின் கீழ் 328 திட்டங்கள் உள்கட்டமைப்பு மேம்பாட்டுக்காக அனுமதிக்கப்பட்டுள்ளன. இதில் 92 பொதுவசதி திட்டங்களும் 200 உள்கட்டமைப்பு மேம்பாட்டுத் திட்டங்களும் இதுவரை நிறைவடைந்துள்ளன.
தமிழ்நாட்டைப் பொறுத்த வரை, மொத்தம் 97 திட்டங்களுக்கு அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. 46 பொதுவசதி மையத் திட்டங்களுக்கு அனுமதி அளிக்கப்பட்டு 26 திட்டங்கள் நிறைவடைந்துள்ளன. 51 உள்கட்டமைப்பு திட்டங்களுக்கு அனுமதி வழங்கப்பட்டு 35 திட்டங்கள் முடிவடைந்துள்ளன.
புதுச்சேரியில் ஒரு உள்கட்டமைப்பு மேம்பாட்டுத் திட்டத்திற்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது.
மத்திய குறு, சிறு, நடுத்தர தொழில் நிறுவனங்கள் துறை இணை அமைச்சர் திரு. பானு பிரதாப் சிங் வர்மா மக்களவையில் எழுத்து மூலம் அளித்த பதிலில் இதனைத் தெரிவித்துள்ளார்.
***
SRI/PKV/SG/KRS
(Release ID: 1907665)