சாலைப் போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைத்துறை அமைச்சகம்
பாலங்கள் கட்டுதல்
Posted On:
16 MAR 2023 2:18PM by PIB Chennai
வாகனங்கள் மற்றும் உள்ளூர் மக்கள் சாலையில் கடந்து செல்வதற்காக இருபுறமும் அணுகுச்சாலையுடன் மேம்பாலம், சுரங்கப்பாதை, குறுக்குப்பாதை உள்ளிட்டப் பல்வேறு வசதிகள் செயல்படுத்தப்பட்டு வருகின்றன. தேசிய நெடுஞ்சாலை 66-ல் உள்ள சாலைக்கடப்பிற்கான வசதிகள் குறித்த விவரங்கள் வெளியிடப்பட்டுள்ளன.
பல்வேறு இடங்களில் மேம்பாலம் அமைக்கப்பட்டுள்ள பகுதிகளில் குறுக்குப்பாதை அமைத்து தர வேண்டும் என்று உள்ளூர் மக்கள் கோறிக்கை வைக்கின்றனர். இதையடுத்து அவர்களுடனான ஆலோசனைக்கேற்ப நிதிச்சூழல் மற்றும் தொழில்நுட்ப அடிப்படையில் உயர்த்தப்பட்ட சாலை அல்லது மேம்பாலம் அமைக்கப்படுகிறது.
இதில் ஒருபகுதியாக முக்கோலாவிலிருந்து தமிழ்நாட்டு எல்லை வரை 6 வாகன சுரங்கப்பாதை, 1 இலகுரக வாகன சுரங்கப்பாதை, 8 வாகன மேம்பாலம், ஒரு குறுக்குப்பாதை ஆகியவை கட்டப்பட்டு உள்ளன.
தேசிய நெடுஞ்சாலை 66-ல் கேரளா, தமிழ்நாடு எல்லையில் முக்கோலா சந்திப்பு வரை 26.5 கிலோ மீட்டர் தொலைவிலிருந்து 43 கிலோ மீட்டர் தொலைவிற்குள் மேம்பாலம் அமைக்க பரிந்துரைக்கப்பட்டுள்ளன.
இத்தகவலை மத்திய சாலைப் போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைத்துறை அமைச்சர் திரு நிதின் கட்கரி மக்களவையில் எழுத்துப்பூர்வமாக தெரிவித்தார்.
***
SRI/IR/RJ/KRS
(Release ID: 1907635)