சிறப்பு சேவைகள் மற்றும் கட்டுரைகள்
azadi ka amrit mahotsav

பால் மற்றும் பால் பொருட்களுக்கான தென் பிராந்தியத்தில் முதல் சான்றிதழ் உரிமத்தை , இந்திய தர நிர்ணய அமைவனம், தென் பிராந்திய அலுவலகம் & நந்தினி மெகா ஹைடெக் ஆலை, கர்நாடகாவிற்கு வழங்கியது

Posted On: 16 MAR 2023 3:25PM by PIB Chennai

இந்திய தர நிர்ணய அமைவனம் (பி .ஐ .எஸ்) என்பது இந்திய அரசின் நுகர்வோர் விவகாரங்கள், உணவு மற்றும் பொது விநியோக அமைச்சகத்தின் கீழ் செயல்படும் ஒரு சட்டரீதியான அமைப்பாகும். இது பொருள்களுக்கான தர உரிமம் (ஐஎஸ்ஐ மார்க்), மேலாண்மை திட்ட சான்றிதழ், தங்கம் மற்றும் வெள்ளி நகைகள்/கலைப் பொருள்களுக்கான ஹால்மார்க் உரிமம் மற்றும் ஆய்வகச் சேவைகளின் நலன் மற்றும் நுகர்வோர் பாதுகாப்பை நோக்கமாகக் கொண்ட பல்வேறு திட்டங்களை செயல்படுத்துகிறது.

இந்திய தர நிர்ணய அமைவனம் , தென் பிராந்திய அலுவலகம்,  பால் மற்றும் பால் பொருட்களுக்கான இணக்க மதிப்பீட்டுத் திட்டம் (CAS MMP)"க்கான தென் பிராந்தியத்தில் முதல் உரிமத்தை M/s நந்தினி மெகா ஹைடெக் தூள் ஆலை, கர்நாடகா பால் கூட்டமைப்பு, ராமநகரா, கர்நாடகாவிற்கு வழங்கியுள்ளது.

இந்த CAS MMP திட்டம், இந்திய தர நிர்ணய அமைவனம் (BIS) மற்றும் தேசிய பால்வள மேம்பாட்டு வாரியம் (NDDB) இணைந்து உருவாக்கப்பட்டது. மேலும் இது, இந்திய தரநிலைகளின்படி தயாரிப்பு சான்றிதழின் ஒருங்கிணைந்த உரிமம் மற்றும் NDDB இன் படி சான்றிதழ் மற்றும் IS/ISO 22000 அமைப்பு சான்றிதழை, பால் மற்றும் பால் பொருட்கள் தொடர்பான அனைத்து நிறுவனங்களுக்கும் வழங்குகிறது.

மாண்புமிகு மாநில அமைச்சர் திரு அஷ்வினி குமார் சௌபே, (நுகர்வோர் விவகாரங்கள், உணவு மற்றும் பொது விநியோகம் மற்றும் சுற்றுச்சூழல், வனம் மற்றும் காலநிலை மாற்றம் துறைகள்), 15 மார்ச் 2023 அன்று உலக நுகர்வோர் உரிமைகள் தின கொண்டாட்டத்தின் போது, புது தில்லியில் இன்நிறுவனத்திற்கு உரிமை சான்றிதழை வழங்கினார்.

இந்த திட்டத்தை மாண்புமிகு பிரதமர் திரு.நரேந்திர மோடி அவர்கள், 2021 டிசம்பரில், இந்திய பால் துறை மற்றும் நுகர்வோரின் நலனுக்காக பால் மற்றும் பால் பொருட்களின் single-point சான்றிதழ் முறையை எளிதாக்கினார். பால் துறையில் ஒரு வலுவான தரமான சுற்றுச்சூழல் அமைப்பை நிறுவுதல், செயல்படுத்துதல், பராமரித்தல் மற்றும் தொடர்ந்து மேம்படுத்துதல் ஆகிய அனைத்து அம்சங்களையும் நோக்கிய முழுமையான அணுகுமுறையை இந்தத் திட்டம் நோக்கமாகக் கொண்டுள்ளது. சான்றிதழ் செயல்முறை ஒருங்கிணைக்கப்பட்டு எளிமைப்படுத்தப்பட்டுள்ளது, இதன் விளைவாக & ஒரே நாடு- ஒரே சான்றிதழ் & கொள்கையின் உண்மையான நோக்கில் , சான்றிதழின் நேரம் மற்றும் செலவு கணிசமாகக் குறைக்கப்பட்டது.

 


(Release ID: 1907538)
Read this release in: English