நுகர்வோர் நலன், உணவு மற்றும் பொது விநியோகம் அமைச்சகம்
உலகளவில் இந்தியா பெற்றுள்ள மரியாதையை பொருளாதார ரீதியில் முன்னேறுவதற்கான வாய்ப்பாக மாற்ற திரு. பியூஷ் கோயல் அழைப்பு
இடுகை இடப்பட்ட நாள்:
15 MAR 2023 9:42PM by PIB Chennai
அண்மைக் காலத்தில் உலகளவில் இந்தியா பெற்றுள்ள மரியாதையை வாய்ப்பாக மாற்ற வேண்டும் என்று மத்திய நுகர்வோர் விவகாரம், உணவு மற்றும் பொது விநியோகத் துறை அமைச்சர் திரு. பியூஷ் கோயல் வலியுறுத்தியுள்ளார். உலக நுகர்வோர் உரிமைகள் தினத்தையொட்டி அவர் வெளியிட்டுள்ள செய்தியில் நுகர்வோர் தங்களது உரிமைகளுக்கான கோரிக்கைகளை, தரத்துக்கான உணர்வாக மாற்ற வேண்டும் என்று கேட்டுக் கொண்டுள்ளார்.
அமிர்த காலத்தில் இந்தியாவை வளர்ந்த நாடாக மாற்ற நாம் அனைவரும் கூட்டாக உழைக்க வேண்டும் என்று, புகழ்மிக்க முன்னோடித் தலைவராக விளங்கும் பிரதமர் திரு. நரேந்திர மோடி விடுத்துள்ள அழைப்பை நிறைவேற்ற வேண்டும் என்று அவர் வலியுறுத்தியுள்ளார். நுகர்வோருக்கு தொண்டாற்ற உகந்த சூழலை ஏற்படுத்த வேண்டும் என்று வலியுறுத்தியுள்ள அவர், நுகர்வோருக்கு தரமான பொருட்கள் மற்றும் சேவைகளை வழங்குவதில் எப்போதும் கவனம் செலுத்த வேண்டும் என்று சுட்டிக் காட்டியுள்ளார்.
பொருட்கள் மற்றும் சேவைகளின் உயரிய தரத்தை மக்கள் விரும்புவது அவர்களது உரிமை என்று கூறியுள்ள திரு. கோயல், இந்த உரிமையைக் கொண்டாடும் தினமாக நுகர்வோர் தினம் விளங்குகிறது என்று தெரிவித்துள்ளார்.
மேலும் விவரங்களுக்கு இந்த ஆங்கில செய்திக் குறிப்பைக் காணவும்: https://pib.gov.in/PressReleseDetail.aspx?PRID=1907363
***
SRI/PKV/SG/GK
(வெளியீட்டு அடையாள எண்: 1907464)
வருகையாளர் எண்ணிக்கை : 185