சமூக நிதி மற்றும் அதிகாரமளித்தல் அமைச்சகம்
மூத்த குடிமக்களுக்கான நிலையான மாதிரி சேவைகள்
प्रविष्टि तिथि:
15 MAR 2023 4:39PM by PIB Chennai
சமுதாயத்தில் கூட்டுக் குடும்ப முறை படிப்படியாக குறைந்து வருவதைக் கருத்தில் கொண்டு, பெற்றோர் மற்றும் மூத்த குடிமக்கள் நலப் பராமரிப்புச் சட்டம் 2007 கொண்டுவரப்பட்டது. இந்தச் சட்டத்தை முறையாக செயல்படுத்தும் வகையில் அரசு மாதிரி விதிமுறைகளை மாநில அரசுகள் மற்றும் யூனியன் பிரதேசங்களுக்கு அனுப்பியுள்ளது. ஒவ்வொரு மாநிலத்துக்கும் ஏற்ற கள ஏதார்த்தங்களைக் கருத்தில் கொண்டு மாநில விதிமுறைகளை வகுத்துக் கொள்ள அனுமதிக்கப்பட்டுள்ளது.
இந்தச் சட்டம் கொண்டுவரப்பட்டு பத்து ஆண்டுகளுக்கு மேல் ஆன நிலையில், பல்வேறு தரப்பில் இருந்தும் வந்த ஏராளமான புகார்கள் மற்றும் ஆலோசனைகளின் அடிப்படையில் இந்தச் சட்டத்தை செயல்திறனுடன் அமல்படுத்தும் வகையில் தேவையான திருத்தங்களை செய்ய முடிவு செய்யப்பட்டது. பல்வேறு அமைச்சர்கள், மாநில அரசுகள் தன்னார்வ அமைப்புகள், கள நிபுணர்கள் ஆகியோரை கலந்தாலோசித்து, பெற்றோர் மற்றும் மூத்தக் குடிமக்கள் நலப் பராமரிப்பு (திருத்த) மசோதா -2019 மக்களவையில் அறிமுகப்படுத்தப்பட்டது.
இத்தகவலை மாநிலங்களவையில் இன்று மத்திய சமூகநீதி மற்றும் அதிகாரமளித்தல் துறை இணையமைச்சர் திரு ஏ நாராயணசாமி எழுத்து பூர்வமாக அளித்த பதிலில் தெரிவித்தார்.
***
AD/PKV/AG/KPG
(रिलीज़ आईडी: 1907301)
आगंतुक पटल : 156