சமூக நிதி மற்றும் அதிகாரமளித்தல் அமைச்சகம்
azadi ka amrit mahotsav

மூத்தக் குடிமக்கள் நலனுக்கான அடல் வயோ அபியுதய் திட்டத்தில் அரசு சாரா அமைப்புகளுக்கு மானிய உதவி

இடுகை இடப்பட்ட நாள்: 15 MAR 2023 4:40PM by PIB Chennai

மூத்தக் குடிமக்களுக்கு அடல் வயோ அபியுதய் திட்டத்தின் ஓர் அம்சமாக ஒருங்கிணைந்த திட்டத்தை   மத்திய சமூக நீதி மற்றும் அதிகாரமளித்தல் துறை  அமல்படுத்துகிறது. இந்தத் திட்டத்தின் கீழ், மூத்தக் குடிமக்களுக்கான இல்லங்களை நடத்துகின்ற மற்றும் பராமரிக்கின்ற அரசு சாரா அமைப்புகள்/  தொண்டு நிறுவனங்கள் ஆகியவற்றுக்கு மானியத்துடன் நிதியுதவி வழங்கப்படுகிறது.

இந்தத் திட்டத்தின் கீழ், குடியிருப்பு, ஊட்டச்சத்து, மருத்துவ கவனிப்பு, பொழுதுபோக்கு போன்ற வசதிகள் மூத்தக் குடிமக்களுக்கு கட்டணமின்றி வழங்கப்படுகின்றன.

இந்தத் திட்டங்களுக்கு மானியம் பெறும் அமைப்புகளை கண்காணிக்க தனிப்பிரிவை சமூகநீதி அமைச்சகம் ஏற்படுத்தியுள்ளது. எதிர்மறையான அறிக்கை இந்தப்பிரிவில் இருந்து வரப்பெற்றால், சம்பந்தப்பட்ட அரசு சாரா அமைப்பிடமிருந்து விளக்கம் கோரும் வாய்ப்பு அளிக்கப்படும். இதற்கான பதில் திருப்தி அளிக்கவில்லை என்றால், அந்த அமைப்புக்கு அளிக்கப்படும் மானியம் நிறுத்தப்படும்.

மாநிலங்களவையில் இன்று கேள்வி ஒன்றுக்கு எழுத்துப் பூர்வமாக பதில் அளித்த மத்திய சமூக நீதி மற்றும் அதிகாரமளித்தல் துறை  இணை அமைச்சர் திரு ஏ நாராயணசாமி இந்தத் தகவலைத் தெரிவித்தார்.

 

                                           -----

AD/SMB/RS/KPG


(வெளியீட்டு அடையாள எண்: 1907281) வருகையாளர் எண்ணிக்கை : 231
இந்த வெளியீட்டை படிக்க: English , Marathi