சாலைப் போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைத்துறை அமைச்சகம்
சிறந்த கண்காணிப்பு மற்றும் ஒருங்கிணைப்புக்காக அனைத்து 100 பொலிவுறு நகரங்களிலும் ஒருங்கிணைந்த கட்டளை மற்றும் கட்டுப்பாட்டு மையங்கள் செயல்படுத்தப்பட்டன
Posted On:
15 MAR 2023 4:09PM by PIB Chennai
கடந்த ஜூன் 25, 2015-ம் ஆண்டு பொலிவுறு நகரங்கள் இயக்கத்தை மத்திய அரசு தொடங்கியது. ஜனவரி 2016 முதல் ஜூன் 2018 வரை 4 சுற்றுகளாக நடத்தப்பட்ட போட்டியின் மூலம் 100 பொலிவுறு நகரங்கள் தேர்ந்தெடுக்கப்பட்டனர்.
சிறந்த கண்காணிப்பு மற்றும் ஒருங்கிணைப்புக்காக அனைத்து 100 பொலிவுறு நகரங்களிலும், ஒருங்கிணைந்த கட்டளை மற்றும் கட்டுப்பாட்டு மையங்கள் செயல்படுத்தப்பட்டன. 100 ஒருங்கிணைந்த கட்டளை மற்றும் கட்டுப்பாட்டு மையங்களில் 30 மையங்கள் தானியங்கி எண் பலகை, ஒருங்கிணைந்த போக்குவரத்து மேலாண்மை முறை போன்ற போக்குவரத்து மேலாண்மை விவகாரங்களில் செயல்பட்டு வருகிறது.
அகமதாபாத், சூரத், சண்டிகர், கான்பூர், லூதியானா, நாசிக், சகரன்பூர், உஜ்ஜெய்ன், விசாகப்பட்டினம் உள்ளிட்ட நகரங்களில் போக்குவரத்து மேலாண்மை முறை அமைப்புகள் இடம்பெற்றுள்ளன.
போக்குவரத்து விதிகளை மீறியதற்காக நாடு முழுவதும் பல்வேறு மாநிலங்களில் ஒருங்கிணைந்தப் போக்குவரத்து மாநிலங்களின் மூலம் அபராதம் விதிக்கப்பட்டது. 10.3.2023-ம் ஆண்டு வரை தமிழ்நாட்டில், கோயம்பத்தூர், சென்னை, கரூர், சேலம், திருச்சிராப்பள்ளி ஆகிய நகரங்களில் அளிக்கப்பட்ட மொத்த அபராத ரசீதுகளும், அதற்கான தொகையும், ஈட்டப்பட்ட வருவாயும் வெளியிடப்பட்டுள்ளன.
இத்தகவலை மத்திய சாலைப்போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைத் துறை அமைச்சர் திரு நிதின் கட்கரி மாநிலங்களவையில் எழுத்துப்பூர்வமாக தெரிவித்தார்.
***
AD/IR/RJ/KPG
(Release ID: 1907269)
Visitor Counter : 139