இந்திய போட்டிகள் ஆணையம்
azadi ka amrit mahotsav

எல் & டி அடிப்படைக் கட்டமைப்பு மேம்பாட்டுத் திட்டங்கள் நிறுவனத்தின் 100 சதவீத சமபங்கு மூலதனத்தை எபிக் கன்ஸஷன்ஸ் பிரைவேட் லிமிடெட் நிறுவனமும், குட்கி டிரான்ஸ்மிஷன் நிறுவனத்தின் பங்குகளை இன்ஃப்ராஸ்ட்ரக்சர் யீல்டு பிளஸ் II நிறுவனமும் வாங்குவதற்கு சிசிஐ ஒப்புதல் அளித்துள்ளது

Posted On: 15 MAR 2023 11:57AM by PIB Chennai

எல் & டி அடிப்படைக் கட்டமைப்பு மேம்பாட்டுத் திட்டங்கள் நிறுவனத்தின் 100 சதவீத சமபங்கு மூலதனத்தை எபிக் கன்ஸஷன்ஸ் பிரைவேட் லிமிடெட்  நிறுவனமும், குட்கி டிரான்ஸ்மிஷன் நிறுவனத்தின் (கேடிஎல்) பங்குகளை  இன்ஃப்ராஸ்ட்ரக்சர் யீல்டு பிளஸ் II நிறுவனமும் வாங்குவதற்கு 2022, போட்டி சட்டத்தின் பிரிவு 31 (1)ன் படி இந்திய போட்டி ஆணையம் (சிசிஐ) ஒப்புதல் அளித்துள்ளது.

பங்குகள் வாங்குவதற்கு உத்தேசிக்கப்பட்டுள்ள விகிதங்கள் பற்றிய  விவரம்:

  1. லார்சன் அண்ட் டப்ரோ நிறுவனத்திடமிருந்து எல் அண்ட் டி ஐடிபிஎல் நிறுவனத்தின் சமபங்கு மூலதனத்தின் 51 சதவீதத்தையும், சிபிபிஐபி இந்தியா  பிரைவேட் ஹோல்டிங்ஸ் நிறுவனத்தின் 49 சதவீதத்தையும், இசிபிஎல் வாங்கும்.
  2. கேடிஎல் நிறுவனத்தின் (அதாவது எல் அண்ட் டி ஐடிபிஎல் நிறுவனத்திற்கு முழுதும் சொந்தமான துணை நிறுவனம்) 100 சதவீத சமபங்கு மூலதனத்தை ஐஒய்பி II வாங்கும்.

இசிபிஎல் என்ற தனியார் நிறுவனம் அடிப்படை கட்டமைப்புத் திட்டங்களை மேம்படுத்துதல், பராமரித்தல், பழுதுபார்த்தல், நிர்வகித்தல், மாற்றம் செய்தல் போன்ற பணிகளில் ஈடுபடுகிறது.

எல் அண்ட் டி ஐடிபில் நிறுவனம் தனது துணை நிறுவனங்கள் மூலம் இந்திய தேசிய நெடுஞ்சாலைகள் ஆணையம், மாநில நிர்வாகங்கள் ஆகியவற்றுடன் ஒப்பந்தங்கள் செய்து கொள்வதோடு மின்சார உற்பத்தி, மின்சாரத்தை கொண்டு செல்லுதல், விநியோகித்தல் பணிகளை மேற்கொள்ளும் நிறுவனங்களுடனும் சேவை ஒப்பந்தத்தை செய்துகொள்கிறது. கட்டமைத்தல் - நிதியுதவி செய்தல் - இயக்குதல் – மாற்றுதல், கட்டமைத்தல்  - இயக்குதல் – மாற்றுதல், கட்டமைத்தல் - இயக்குதல் –  ஆண்டு இறுதியில் மாற்றுதல் போன்ற பணிகளை 15 முதல் 35 ஆண்டுகள் வரையிலான காலகட்டத்திற்கு ஒப்பந்தம் செய்துகொள்கிறது. சலுகை காலம் முடியும் போது ஒட்டுமொத்த கட்டமைப்புகளையும் சம்பந்தப்பட்ட அரசு நிறுவனங்களுக்கு மாற்றுகிறது.

 

***

  AD/SMB/RS/KPG


(Release ID: 1907092) Visitor Counter : 141


Read this release in: English , Urdu , Hindi , Telugu