பாதுகாப்பு அமைச்சகம்
நாட்டின் வடக்கு எல்லைப் பகுதிகளில் மேற்கொள்ளப்பட்டு வரும் உள்கட்டமைப்பு திட்டங்களின் கட்டுமான பணிகள் குறித்து மத்திய பாதுகாப்பு அமைச்சர் திரு ராஜ்நாத் சிங் தலைமையில் உயர்நிலை ஆய்வுக் கூட்டம்
Posted On:
14 MAR 2023 7:52PM by PIB Chennai
நாட்டின் வடக்கு எல்லைப் பகுதிகளில் மேற்கொள்ளப்பட்டு வரும் பல்வேறு உள்கட்டமைப்பு திட்டங்களின் கட்டுமான பணிகளின் உயர்நிலை ஆய்வுக் கூட்டம் மத்திய பாதுகாப்பு அமைச்சர் திரு ராஜ்நாத் சிங் தலைமையில் புதுதில்லியில் நடைபெற்றது. நாட்டின் பாதுகாப்பு சம்பந்தமான விசயங்களில், ‘ஒட்டுமொத்த நாடு' என்ற அணுகுமுறை பின்பற்றப்பட வேண்டும் என்று வலியுறுத்தி, நிலுவையில் உள்ள திட்டங்கள் அனைத்தையும் முன்னுரிமை அடிப்படையில் விரைவாக முடித்திட அவர் உத்தரவிட்டார். நிலுவையில் உள்ள திட்டங்களைத் துரிதப்படுத்துவதற்கு செயலாளர்கள் அடங்கிய குழுவை அமைத்து, அக்குழு குறிப்பிட்ட இடைவெளிகளில் பணிகளை ஆய்வு செய்திட முடிவு செய்யப்பட்டது.
மத்திய சாலைப் போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைகள் துறை அமைச்சர் திரு நிதின் கட்காரி, மத்திய ரயில்வே, தகவல் தொடர்பு, மின்னணு மற்றும் தகவல் தொழில்நுட்பத் துறை அமைச்சர் திரு அஸ்வினி வைஷ்ணவ், மத்திய எரிசக்தி, புதிய மற்றும் புதுப்பிக்கத்தக்க எரிசக்தித் துறை அமைச்சர் திரு ஆர்.கே. சிங், மத்திய சுற்றுச்சூழல், வனம் மற்றும் பருவநிலை மாற்றத்துறை அமைச்சர் திரு பூபேந்திர யாதவ், பாதுகாப்புத்துறை இணையமைச்சர் திரு அஜய் பட், தேசிய பாதுகாப்பு ஆலோசகர் திரு அஜித் தோவல், அருணாச்சலப் பிரதேச முதல்வர் திரு பேமா கண்டு, உத்தராகண்ட் முதல்வர் திரு புஷ்கர் சிங் தாமி, லடாக் யூனியன் பிரதேசத்தின் துணைநிலை ஆளுநர் பிரிகேடியர் (டாக்டர்) பி.டி. மிஸ்ரா (ஓய்வு), முப்படைகளின் தலைமைத் தளபதி ஜெனரல் அனில் சவுகான், விமானப்படை தலைமைத் தளபதி ஏர் சீஃப் மார்ஷல் வி. ஆர் சௌத்ரி, ராணுவத் தலைமை தளபதி ஜெனரல் மனோஜ் பாண்டே, பாதுகாப்புச் செயலாளர் திரு கிரிதர் அரமானே மற்றும் மூத்த அதிகாரிகள் உள்ளிட்டோர் இந்த ஆய்வுக் கூட்டத்தில் கலந்து கொண்டனர்.
***
AD/RB/RR
(Release ID: 1907061)