மீன்வளம், கால்நடை பராமரிப்பு மற்றும் பால்வளத் துறை அமைச்சகம்
azadi ka amrit mahotsav

கடந்த இரண்டு நிதி ஆண்டுகளில் 35 மாநிலங்கள்/யூனியன் பிரதேசங்கள் மற்றும் இதர அமல்படுத்தும் முகமைகளின் ரூ.12,035.07 கோடி மதிப்பிலான பரிந்துரைகளுக்கு பிரதமரின் மீன்வள மேம்பாட்டுத் திட்டம் ஒப்புதல் அளித்துள்ளது

प्रविष्टि तिथि: 14 MAR 2023 6:42PM by PIB Chennai

கடந்த இரண்டு நிதி ஆண்டுகளின் போது 35 மாநிலங்கள்/யூனியன் பிரதேசங்கள் மற்றும் இதர அமல்படுத்தும் முகைமைகளின் ரூ.12,035.07 கோடி மதிப்பிலான பரிந்துரைகளுக்கு பிரதமரின் மீன்வள மேம்பாட்டுத் திட்டத்தின் கீழ் மீன்வளம், கால்நடை பராமரிப்பு மற்றும் பால்வளத்துறை அமைச்சகம், மீன்வளத்துறை ஒப்புதல் அளித்துள்ளது. இதில் மத்திய அரசின் பங்கீடு ரூ.4,536.36 கோடி ஆகும். நாட்டில் மீன் உற்பத்தி இதுவரை இல்லாத அளவாக 2021-22ம் நிதியாண்டில் 162.48 லட்சம் டன்னாக இருந்தது. கடந்த 2019-20ம் ஆண்டில் 141.63 லட்சம் டன் மீன் உற்பத்தி செய்யப்பட்டது. கடந்த 3 ஆண்டுகளில் உற்பத்தி 14.72% அதிகரித்துள்ளது.

இத்தகவலை மத்திய மீன்வளம், கால்நடைப் பராமரிப்பு, பால்வளத்துறை அமைச்சர் திரு.பர்ஷோத்தம் ரூபாலா மக்களவையில் இன்று எழுத்துப்பூர்வமாக தெரிவித்தார்.

 

***‘

AD/IR/SG/RR

 


(रिलीज़ आईडी: 1906943) आगंतुक पटल : 135
इस विज्ञप्ति को इन भाषाओं में पढ़ें: English , Urdu