மீன்வளம், கால்நடை பராமரிப்பு மற்றும் பால்வளத் துறை அமைச்சகம்
பிரதமரின் மத்சய சம்பதா திட்டம், மீன்வளம் மற்றும் மீன்வளர்ப்புக் கட்டமைப்பு நிதியம், பால்வளத் தொழில்முனைவோர் மேம்பாட்டுத் திட்டம் மீன்வளம் மற்றும் பால்வளத்திற்கான பால்வள மேம்பாட்டு தேசியத் திட்டம் போன்றவற்றை மீன்வளம், கால்நடை பராமரிப்பு மற்றும் பால்வள அமைச்சகம் செயல்படுத்தி வருகிறது
प्रविष्टि तिथि:
14 MAR 2023 6:36PM by PIB Chennai
பிரதமரின் மத்சய சம்பதா திட்டம், மீன்வளம் மற்றும் மீன்வளர்ப்புக் கட்டமைப்பு நிதியம், பால்வளத் தொழில்முனைவோர் மேம்பாட்டுத் திட்டம் மீன்வளம் மற்றும் பால்வளத்திற்கான பால்வள மேம்பாட்டு தேசியத் திட்டம் போன்றவை அமல்படுத்தப்பட்டு வருவதாக மீன்வளம், கால்நடை பராமரிப்பு மற்றும் பால்வளத்துறை அமைச்சர் திரு பர்ஷோத்தம் ரூபாலா தெரிவித்துள்ளார்.
மக்களவையில் இன்று கேள்வி ஒன்றுக்கு எழுத்து மூலம் பதில் அளித்த அவர், பிரதமரின் மத்சய சம்பதா திட்டத்தின் கீழ் அரசு நிதி உதவியில் 60 சதவீதம் பெண்களுக்கும், 40 சதவீதம் ஆண்களுக்கும் வழங்கப்படுவதாகக் கூறினார். மீன்வளத்துறையால், செயல்படுத்தப்படும் திட்டங்கள் தேவையின் அடிப்படையிலானவை என்றும், இதற்கான ஆலோசனைகள் மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் இருந்து பெறப்பட்டு நிதியுதவி அளிக்கப்படுவதாகவும் குறிப்பிட்ட பாலின அடிப்படையில், பட்ஜெட் ஒதுக்கீடு செய்யப்படுவதில்லை என்றும் அமைச்சர் தெரிவித்தார்.
***
(AD/SMB/RS/KPG
(रिलीज़ आईडी: 1906940)
आगंतुक पटल : 179
इस विज्ञप्ति को इन भाषाओं में पढ़ें:
English