புதிய மற்றும் புதுப்பிக்கத்தக்க எரிசக்தி அமைச்சகம்

ஆர்பிஐ-யிடமிருந்து ‘உள்கட்டமைப்பு நிதி நிறுவனம்’ என்ற அந்தஸ்தை IREDA பெற்றுள்ளது

Posted On: 13 MAR 2023 7:18PM by PIB Chennai

இந்திய புதுப்பிக்கத்தக்க எரிசக்தி மேம்பாட்டு முகமைக்கு (IREDA) உள்கட்டமைப்பு நிதி நிறுவனம்’ என்ற அந்தஸ்தை ரிசர்வ் வங்கி வழங்கியுள்ளது. இதற்கு முன்பு இந்த நிறுவனம் முதலீடு மற்றும் கடன் நிறுவனம் என்று வகைப்படுத்தப்பட்டிருந்தது.

உள்கட்டமைப்பு நிதி நிறுவனம் என்ற முறையில் IREDA புதுப்பிக்கத்தக்க எரிசக்தி நிறுவனங்களுக்கு நிதி வழங்க இயலும். இதற்கான நிதி திரட்டுதலுக்கு ஏற்ற வகையில் முதலீட்டுத் தளத்தை விரிவுபடுத்த இந்த அந்தஸ்து உதவும்.

IREDA-க்கு கிடைத்துள்ள இந்த அந்தஸ்து முதலீட்டாளர்களின் நம்பிக்கையை அதிகரித்து வணிக முத்திரை மதிப்பை உயர்த்துவதுடன் சந்தையில் ஆக்கப்பூர்வமான பெயரை உருவாக்க இயலும். ஐஆர்இடிஏ-வின் 36 ஆண்டு கால உள்கட்டமைப்பு நிதி வழங்கல் அனுபவத்திற்கு கிடைத்த அங்கீகாரமாகும் இது. இந்த அங்கீகாரத்துடன், 2030 ஆம் ஆண்டுக்குள் புதை படிமம் இல்லாத எரிசக்தி நிறுவு திறனை 500 ஜிகாவாட் அளவிற்கு உயர்த்தும் மத்திய அரசின் இலக்கை எட்ட IREDA தொடர்ந்து பங்களிக்கும்.

***

(Release ID:1906539)

SRI/PKV/RR(Release ID: 1906691) Visitor Counter : 117


Read this release in: English , Marathi , Hindi