வீட்டு வசதி மற்றும் நகர்ப்புற வறுமை ஒழிப்பு அமைச்சகம்
2047 ஆம் ஆண்டுக்குள் இந்தியாவை உலகின் தலைமை நாடாக மாற்ற “இளைஞர் சக்தி” உந்துதலாக இருக்கும்: ஹர்தீப் சிங் பூரி
Posted On:
13 MAR 2023 8:05PM by PIB Chennai
இளைஞர்களின் ஆற்றல் மற்றும் உந்துதல் காரணமாக இந்தியா 2047 ஆம் ஆண்டுக்குள் அனைத்து வகையிலும் உலகின் தலைமை பொறுப்பு வகிக்கும் நாடாக மாறும் என்று மத்திய வீட்டுவசதி மற்றும் நகர்ப்புற விவகாரத்துறை அமைச்சர் திரு.ஹர்தீப் சிங் பூரி கூறியுள்ளார். ஜி20 அமைப்பின் தலைமைத்துவத்தை இந்தியா ஏற்றுள்ள நிலையில், தேசிய நகர்ப்புற விவகார நிறுவனத்தின் பொலிவுறு நகரங்கள் இயக்கம் மற்றும் மத்திய இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு அமைச்சகத்தின் இளைஞர் சக்தி ஆகியவை இணைந்து என்ஒய்சி 2023 என்ற மாநாட்டுக்கு ஏற்பாடு செய்துள்ளன. இந்த மாநாட்டில், இளைஞர்கள் தலைமையில் வளர்ச்சி என்பது குறித்து உரையாற்றிய அமைச்சர், இளைஞர் மேம்பாட்டுத் திட்டங்களுக்காக அரசு ஆண்டுக்கு 90,000 கோடி ரூபாய் செலவிடுவதாக கூறினார்.
இந்த மாநாட்டுக்கு ஏற்பாடு செய்த அமைப்புகளை பாராட்டிய அமைச்சர், பருவநிலை மாற்றம், எதிர்காலப் பணிகள், ஜனநாயகத்தில் இளைஞர்கள் போன்ற விஷயங்கள் குறித்து தங்களது எண்ணங்களை இளைஞர்கள் வெளிப்படுத்தும் தளமாக இது இருக்கும் என்று கூறினார்.
இந்த மாநாடு இளைஞர்கள், நாளைய பிரகாசமான தலைவர்களாக மாறுவதற்கு ஏற்ற வகையில், அவர்களை உருவாக்கும் தளமாக இருக்கும். அண்மைக் காலங்களில் இளைஞர்களிடையே தொழில் முனைவு உணர்வு அதிகரித்துள்ளதன் காரணமாக, ஸ்டார்ட்-அப்களின் எண்ணிக்கை உயர்ந்துள்ளது என்றும் அவர் தெரிவித்தார்.
***
(Release ID:1906576)
SRI/PKV/RR
(Release ID: 1906678)
Visitor Counter : 152