பாதுகாப்பு அமைச்சகம்
azadi ka amrit mahotsav

தற்சார்பு இந்தியா: எச்ஏஎல் நிறுவனத்திடம் இருந்து 70 எச்டிடி-40 அடிப்படை பயிற்சி போர்விமானத்தையும், எல்&டி நிறுவனத்திடமிருந்து வீரர்கள் பயிற்சிக்கான 3 கப்பல்களையும் கொள்முதல் செய்ய புதுதில்லியில் பாதுகாப்பு அமைச்சர் திரு ராஜ்நாத் சிங் முன்னிலையில் ஒப்பந்தங்கள் கையெழுத்தாயின

Posted On: 07 MAR 2023 2:35PM by PIB Chennai

 இந்துஸ்தான் ஏரோநாட்டிக்ஸ் (எச்ஏஎல்) நிறுவனத்திடம் இருந்து  
70 எச்டிடி-40 அடிப்படை பயிற்சி போர்விமானத்தையும், லார்சன் அண்ட் டப்ரோ (எல்&டி) நிறுவனத்திடமிருந்து வீரர்கள் பயிற்சிக்கான
3 கப்பல்களையும் கொள்முதல் செய்ய 2023 மார்ச் 07 அன்று புதுதில்லியில் பாதுகாப்பு அமைச்சர் திரு ராஜ்நாத் சிங் முன்னிலையில் ஒப்பந்தங்கள் கையெழுத்தாயின.

இந்த ஒப்பந்தங்கள் கையெழுத்திடுதல் மற்றும் பரிமாற்றம் செய்தல் நிகழ்வின் போது பாதுகாப்புத்துறைச் செயலாளர்  திரு கிரிதர் அரமனே மற்றும் பாதுகாப்புத்துறையின் மூத்த அதிகாரிகள் எச்ஏஎல், எல்&டி ஆகியவற்றின் பிரதிநிதிகள் பங்கேற்றனர்.

பாதுகாப்புத்துறையில் தற்சார்பை எட்டும் அரசின் முயற்சிகளுக்கு மிகப்பெரும் ஊக்குவிப்பாக எச்ஏஎல் நிறுவனத்திடமிருந்து ரூ.6800 கோடி செலவில் 70 எச்டிடி – 40 பயிற்சி போர் விமானத்தைக் கொள்முதல் செய்ய 2023 மார்ச் 1 அன்று மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்தது. அதே போல் எல்&டி நிறுவனத்திடம் இருந்து ரூ.3100 கோடி மதிப்பில் வீரர்கள் பயிற்சிக்கான 3 கப்பல்களைக் கொள்முதல் செய்வதற்கான ஒப்பந்தத்தில் கையெழுத்திடவும் அமைச்சரவை ஒப்புதல் அளித்தது.

***

AP/SMB/AG/RR


(Release ID: 1904887) Visitor Counter : 182