அறிவியல் மற்றும் தொழில்நுட்பத்துறை
முன்னோடி உயிரியல் இயற்பியலாளர் மற்றும் கட்டமைப்பு உயிரியலாளர் டாக்டர். ஜி. என். ராமச்சந்திரனின் நூற்றாண்டு விழாவில் புரதத்தின் கட்டமைப்பு-செயல்பாட்டு உறவுகளை மறு ஆய்வு செய்தல்
Posted On:
04 MAR 2023 5:36PM by PIB Chennai
குஜராத்தின் வதோதராவில் உள்ள பரோடா மகாராஜா சாயாஜிராவ் பல்கலைக்கழகத்தின் உயிர்வேதியியல் துறையானது "டாக்டர் ஜி. என். ராமச்சந்திரனின் நூற்றாண்டு விழாவில் புரதங்களைக் கொண்டாடுதல் (2023)" என்ற தலைப்பில் சர்வதேச மாநாட்டை ஏற்பாடு செய்தது. டாக்டர் ஜி. என். ராமச்சந்திரன் புரத கட்டமைப்பு துறையில் ஒரு முன்னோடி விஞ்ஞானி ஆவார். அவரது நூற்றாண்டு விழா, அறிவியலில் அவரது தனித்துவமான சாதனைகளை நினைவுகூர்ந்தது.
தொடக்க அமர்வில் பத்மஸ்ரீ விருது பெற்றவர், குளோபல் லீடர்ஸ் அறக்கட்டளையின் "ஆசியாவின் மில்லினியம் தலைவர்", குஜராத் வேளாண் பல்கலைக்கழகத்தின் முன்னாள் துணைவேந்தர் ஆகியோர் சிறப்பு விருந்தினர்களாக கலந்துகொண்டனர். இந்த மாநாட்டில் இந்தியா மற்றும் வெளிநாடுகளைச் சேர்ந்த புகழ்பெற்ற விஞ்ஞானிகளும் கலந்து கொள்கின்றனர்.
தொடக்க அமர்வைத் தொடர்ந்து பல்வேறு மாநாட்டு அமர்வுகள் நடைபெற்றன. சிங்கப்பூர் தேசிய பல்கலைக்கழகத்தின் பேராசிரியர் கினி மஞ்சுநாதா சிறப்புரையாற்றினார், பாம்புகள் மற்றும் பிற விலங்குகளின் புரதம் மற்றும் பெப்டைட் நச்சுகள் குறித்த தனது ஆராய்ச்சியின் பல மருத்துவப் பயன்பாடுகளின் வளர்ச்சி குறித்து அவர் பேசினார். பெங்களூரு இந்திய அறிவியல் கழகத்தின் மூலக்கூறு உயிரியல் பிரிவு பேராசிரியர். சித்தார்த்தா பி. சர்மா, புரதங்களின் கட்டமைப்புத் தன்மை குறித்து பேசினார். உயிர்வேதியியல் துறையைச் சேர்ந்த பேராசிரியர் டிஎன் ராவ், பெப்டிக் அல்சர் மற்றும் இரைப்பைப் புற்றுநோய்களை உண்டாகக் காரணமான ஹெலிகோபாக்டர் பைலோரியின் என்சைம் குறித்து உரை நிகழ்த்தினார். அமெரிக்காவின் ஹூஸ்டனில் உள்ள பெய்லர் மருத்துவக் கல்லூரியைச் சேர்ந்த பேராசிரியர் பி.வி.வி. பிரசாத், மனித ரோட்டா வைரஸின் பிரதிகள் மற்றும் மார்போஜெனீசிஸின் கட்டமைப்பு வழிமுறைகள் குறித்து விரிவுரையாற்றினார். அமெரிக்காவின் பஃபேலோ பல்கலைக்கழகத்தைச் சேர்ந்த டாக்டர் டேவிட் ஹெப்னர், தில்லி பல்கலைக்கழகத்தின் பேராசிரியர் அலோ நாக், அமெரிக்காவின் டெக்சாஸ் ஏ&எம் பல்கலைக்கழகத்தைச் சேர்ந்த டாக்டர் விஷால் எம் கோஹில், ஐஐஎஸ்இஆர் மொஹாலியைச் சேர்ந்த பேராசிரியர் பி. குப்தாசர்மா, ஐஐடி காந்திநகரைச் சேர்ந்த டாக்டர் ஷரத் குப்தா ஆகியோரும் உரையாற்றினர்.
***
AP/PKV/DL
(Release ID: 1904247)
Visitor Counter : 202