பழங்குடியினர் நலத்துறை அமைச்சகம்
அதிக பாதிப்புக்கு உள்ளாகும் பழங்குடியின குழுக்கள் வாழும் பகுதிகளுக்கு அதிகாரிகள் கள ஆய்வு மேற்கொள்வது தொடர்பான ஆலோசனைக் கூட்டத்திற்கு மத்திய பழங்குடியினர் நலத்துறை அமைச்சர் திரு அர்ஜூன் முண்டா தலைமை ஏற்றார்
Posted On:
03 MAR 2023 4:25PM by PIB Chennai
அதிக பாதிப்புக்கு உள்ளாகும் பழங்குடியின குழுக்கள் வாழும் பகுதிகளுக்கு அதிகாரிகள் கள ஆய்வு மேற்கொள்வது தொடர்பாக நேற்று (02.03.2023) தேசிய பழங்குடியின ஆராய்ச்சி நிறுவனத்தில் நடைபெற்ற ஆலோசனைக் கூட்டத்திற்கு மத்திய பழங்குடியினர் நலத்துறை அமைச்சர் திரு அர்ஜூன் முண்டா தலைமை ஏற்றார்.
அதிக பாதிப்புக்கு உள்ளாகும் பழங்குடியின குழுக்கள் வாழும் பகுதிகள் நீண்ட காலமாக புறக்கணிக்கப்பட்டு வருகிறது. பழங்குடி இன மக்களின் வாழ்வாதாரத்தை உயர்த்தும் நோக்கில் பிரதமரின் உறுதியான நடவடிக்கைகள் மூலம் பல்வேறு நலத்திட்டங்கள் செயல்படுத்தப்பட்டு வருகிறது. இந்நிலையில் இதுபோன்ற பழங்குடியின குழுக்கள் வாழும் பகுதிகளுக்கு அதிகாரிகளின் கள ஆய்வின் மூலம் பெறப்படும் முக்கியத் தகவல்கள் இதுபோன்ற திட்டங்களை மேலும் வலுப்படுத்த பயன் அளிக்கும் என்று திரு அர்ஜூன் முண்டா கூறினார். பிரதமரின் அதிக பாதிப்புக்கு உள்ளாகும் பழங்குடியின குழுக்கள் வாழும் பகுதிகள் மேம்பாட்டுத் திட்டத்திற்கு இதுபோன்ற அதிகாரிகளின் கள ஆய்வுத் தகவல்கள் அப்பகுதியில் உள்கட்டமைப்பு மற்றும் மேம்பாட்டு வளர்ச்சிக்கு உதவிகரமாக அமையும் என்று கூறினார்.
பிரதமரின் தொலைநோக்குப் பார்வையான ‘அனைவரும் இணைவோம், அனைவரும் உயர்வோம், அனைவரின் நம்பிக்கையைப் பெறுவோம், அனைவரும் முயற்சிப்போம்’ என்ற நிலைப்பாட்டிற்கு வலுசேர்க்கும் விதமாக பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டியது முக்கியமாகும் என்றார்.
இந்த நிகழ்வில் பழங்குடியினர் நலத்துறையின் செயலாளர் திரு அணில்குமார் ஜா பேசும் போது, அதிக பாதிப்புக்குள்ளாகும் பழங்குடியினக் குழுக்கள் வாழும் பகுதிகளுக்கு இதுபோன்ற அதிகாரிகளின் கள ஆய்வுகள் அதிகம் நடத்தப்பட வேண்டும் என்று வலியுறுத்தினார்.
***
AP/GS/AG/KPG
(Release ID: 1904044)
Visitor Counter : 220