சிறப்பு சேவைகள் மற்றும் கட்டுரைகள்
தேசிய தொழில்நுட்பக் கழகத்தில் (புதுச்சேரி) “கலாச்சார விழா”
Posted On:
03 MAR 2023 2:22PM by PIB Chennai
காரைக்காலில் மத்திய கல்வி அமைச்சகத்தால் நடத்தப்பட்டு வரும் தேசிய தொழில்நுட்பக் கழகம் புதுச்சேரியில் கலாச்சார குழு சார்பாக நடத்தப்படும் இரண்டு நாள் “கலாச்சார விழா (Le Ciel 23)” கல்லூரி வளாகத்திலுள்ள கி. ரா ஆடிட்டோரியத்தில் இன்று (03.03.2023) காலை தொடங்கியது.
இக்கலைவிழாவினை காரைக்கால் நாட்டியாலயா பரதநாட்டிய அகாடமியின் இயக்குநர் கலைமாமணி முனைவர் சித்திரா கோபிநாத் மற்றும் புதுச்சேரி யாக்ஸ்லி குளோபல் இயக்குநர் கார்த்திகேயன் தமிழ்செல்வம் இவர்கள் இருவரது முன்னிலையில் கழகத்தின் இயக்குனர் முனைவர் கி. சங்கரநாராயணசாமி அவர்களும் கழகத்தின் பதிவாளர் முனைவர் சீ. சுந்தரவரதன் அவர்களும் தொடங்கிவைத்தனர்.
முன்னதாக நிகழ்ச்சிக்கு வந்திருந்த அனைவரையும் கலாச்சார குழுவின் தலைவர் முனைவர் A. வெங்கடேசன் அவர்கள் வரவேற்று பேசினார். கலாச்சார குழுவின் செயலாளர் அனிருத் அவர்கள் இரண்டு நாட்கள் இக்கலைவிழாவில் நடக்கவிருக்கும் அனைத்து நிகழ்ச்சியின் தொகுப்பை வெளியிட்டார். இக்கலைவிழாவிற்கு Yaxley Global, Locus Institute, Pepsi, Green trends, Yamaha, Shanthi Jewellers, JV Cycle and Fitness, SBI, Townscript போன்ற நிறுவனங்கள் நிதியுதவி அளித்துள்ளது.
இக்கலைவிழாவில் காரைக்கால், புதுச்சேரி மற்றும் சென்னையைச் சுற்றியுள்ள 15க்கும் மேற்பட்ட கல்லூரிகளிலிருந்து சுமார் 100க்கும் மேற்பட்ட பங்கேற்பாளர்கள் கலந்துகொண்டு பாடல், நடனம், இசைக்குழு, கலை மற்றும் கைவினைப் பொருட்கள், புகைப்படம் மற்றும் இலக்கியப் போட்டிகள் என பல்வேறு போட்டிகளில் கலந்துகொண்டு தங்களின் திறமைகளை வெளிப்படுத்தவுள்ளனர்.
மேலும் இக்கலைநிகழ்ச்சியில் லோஹர் தி பிளாக்ஸ்மித்ஸ் ஸ்ட்ரீட் என்டர்டெயின்மெண்ட்ஸ், பெங்களூரின் மியூசிக் பேண்ட் மற்றும் டிஜே ரிக்கி பிரவுன் அடி. லிக்விட் பெர்குசியனிஸ்ட் நாஷின் டிஜே போன்ற பல்வேறு நிகழ்ச்சிகள் நடத்தப்படவுள்ளது.
இவ்விழாவில் டீன், அசோசியேட் டீன்கள், ஆசிரியர்கள், ஊழியர்கள் மற்றும் மாணவர்கள் அனைவரும் கலந்துகொண்டனர். இவ்விழாவின் ஏற்பாடுகள் அனைத்தையும் கலாச்சார குழுவின் தலைவர் முனைவர் A. வெங்கடேசன் அவர்கள் கலாச்சார குழு உறுப்பினர்களின் உதவியோடு சிறப்பாக ஏற்பாடு செய்திருந்தார்

***
(Release ID: 1903865)