வணிகம் மற்றும் தொழில்துறை அமைச்சகம்
இந்திய நறுமணப் பொருட்கள் வாரியம் 36-வது ஆண்டு விழாவைக் கொண்டாடியது
प्रविष्टि तिथि:
01 MAR 2023 4:11PM by PIB Chennai
கொச்சியை தலைமையிடமாகக் கொண்ட இந்திய நறுமணப் பொருட்கள் வாரியம் 36-வது நிறுவன தின விழாவைக் கொண்டாடியது. இதன் ஒரு பகுதியாக நறுமணப் பொருட்கள் தொழில்துறையினர் மற்றும் ஏற்றுமதியாளர்கள் பங்கேற்ற குழு விவாதத்திற்கும் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.
இந்நிகழ்ச்சியில் பங்கேற்று பேசிய மத்திய வர்த்தகம் மற்றும் தொழில்துறை கூடுதல் செயலாளர் திரு ராஜேஷ் அகர்வால், நறுமணப் பொருட்கள் பிரிவில் பல வகையானப் பொருட்களை ஏற்றுமதி செய்வதன் மூலம் இத்துறையில் இந்தியா மேலும் வலுப்பெறும் என்றார். மதிப்புக் கூட்டுதலை அதிகளவில் மேற்கொள்ளும் போது, இத்துறை மேலும் மீட்சித்தன்மையுடையதாக மாறும் என்று அவர் தெரிவித்தார்.
36-வது நிறுவன தினத்தில் நறுமணப் பொருட்கள் வாரியம் தூய்மையான மற்றும் பாதுகாப்பான நறுமணப் பொருட்கள் தொடர்பான தேசிய அளவிலான பிரச்சார இயக்கத்திற்கும் ஏற்பாடு செய்திருந்தது. 20 மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களை உள்ளடக்கிய இந்த இயக்கம் உணவுப் பாதுகாப்பு மற்றும் தரமான நறுமணப் பொருட்கள் குறித்த தகவல்களைப் பரப்புவதற்காக ஏற்பாடு செய்யப்பட்டது.
நறுமணப் பொருட்கள் வாரியம் மத்திய வர்த்தக அமைச்சகத்தால் 1987-ம் ஆண்டு பிப்ரவரி 26-ம் தேதி தொடங்கப்பட்டது. நறுமணப் பொருட்கள் தொழில்துறையில் ஈடுபட்டுள்ளோர் மற்றும் ஏற்றுமதியாளர்களுக்கிடையேப் பல்வேறு நிலைகளில் இணைப்பு பாலமாக இந்த வாரியம் செயல்பட்டு வருகிறது.
***
AP/PLM/RJ/KPG
(रिलीज़ आईडी: 1903436)
आगंतुक पटल : 342