தேசிய நிதி அறிவிக்கை ஆணையம்

காப்பீட்டு ஒப்பந்தங்களுக்கான கணக்குப் பதிவுக்கான ஏஎஸ் 117 தரநிலை குறித்து தேசிய நிதி அறிக்கை ஆணையம், காப்பீட்டு நிறுவனங்களுடன் ஆலோசனை

Posted On: 23 FEB 2023 1:12PM by PIB Chennai

காப்பீட்டு ஒப்பந்தங்களுக்கான கணக்குப் பதிவுகளில் ஏஎஸ் 117 தரநிலையில் மேற்கொள்ள உத்தேசிக்கப்பட்டுள்ள மாற்றங்கள்  குறித்து தேசிய நிதி அறிக்கை ஆணையத்தின் செயற்குழு காப்பீட்டு நிறுவனங்களுடன் ஆலோசனை நடத்தியது. இந்தியக் காப்பீட்டு ஒழுங்குமுறை ஆணையத்தின் பிரதிநிதிகள் இதில் பங்கேற்றனர்.

சர்வதேச நிதி அறிக்கை தரநிலை 17ஐ அடிப்படையாகக் கொண்டு உலகளாவிய தரத்துடன் ஐஎன்டிஏஎஸ் 117 உருவாக்கப்பட்டுள்ளது. 2017ம் ஆண்டு வெளியிடப்பட்டு 2023 ஜனவரி 1ம் தேதி முதல் நடைமுறைக்கு வந்துள்ளது. இது காப்பீட்டாளர்களை லாபம் நிதிநிலை உள்ளிட்டவைத் தொடர்பான சிறந்த புரிதலை ஏற்படுத்தும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.   

ஐஎன்டி ஏஎஸ் 117 தரநிலை தொடர்பாக 2018ம் ஆண்டு முதல் பொதுமக்கள் உடனான ஆலோனைகளில் இந்திய பட்டயக் கணக்காயர் நிறுவனம் பெற்ற கருத்துகளை தேசிய நிதி அறிக்கை ஆணையம் ஆய்வு செய்தது. இந்திய பட்டயக் கணக்காயர் நிறுவனத்தின் வரைவு அறிக்கை குறித்து பல்வேறு ஆயுள் காப்பீட்டு நிறுவனங்கள் தங்களது கருத்துகளை தெரிவித்தன.

ஆலோசனைக் கூட்டத்தில் பேசிய தேசிய நிதி அறிக்கை ஆணையத்தின் தலைவர் திரு. அஜய்பூஷன் பாண்டே, காப்பீட்டுத் துறை உலகளாவிய பொருளாதாரத்தில் முக்கியப் பங்காற்றுவதாக கூறினார். இதில் சர்வதேச அளவில் சிறந்த தரநிலைகளைக் கொண்ட கணக்குப் பதிவு முறைகள் பின்பற்றப்பட வேண்டும் என்று அவர் தெரிவித்தார்.

***

AP/PLM/SG/KRS



(Release ID: 1901697) Visitor Counter : 112


Read this release in: Urdu , English , Hindi , Telugu