புவி அறிவியல் அமைச்சகம்
சமுத்திரங்களையும், அதன் பல்லுயிர்களையும் பேணிப் பாதுகாக்க ஐநா உறுப்பு நாடுகள் ஈடுபட வேண்டும் என்று இந்தியா வற்புறுத்தியுள்ளது
Posted On:
22 FEB 2023 5:43PM by PIB Chennai
சமுத்திரங்களையும், அதன் பல்லுயிர்களையும் பேணிப் பாதுகாக்க ஐநா உறுப்பு நாடுகள் ஈடுபட வேண்டும் என்று இந்தியா வற்புறுத்தியுள்ளது.
இது சம்பந்தமான முக்கியத்துவம் வாய்ந்த வரைவு அறிக்கையைப் பற்றி மத்திய அறிவியல், தொழில்நுட்பம் (தனிப்பொறுப்பு), புவி அறிவியல் (தனிப்பொறுப்பு), பிரதமர் அலுவலகம், பணியாளர் நலன், பொதுமக்கள் குறைதீர்ப்பு, ஓய்வூதியங்கள், அணுசக்தி மற்றும் விண்வெளித்துறை இணை அமைச்சர் டாக்டர் ஜிதேந்திர சிங் பேசும் போது, பல்லுயிர் மேலாண்மை குறித்த இந்தியாவின் அணுகுமுறை உலக அளவில் ஏற்றுக் கொள்ளப்படும் 3 முக்கிய கொள்கைகளான பாதுகாப்பு, நிலையான பயன்பாடு, சமநிலையிலான பயன்கள் பகிர்தல் போன்றவைகளாகும் என்றார்.
பல்லுயிர் பாதுகாப்புச்சட்டம் 2002-ன் கீழ் உலகளாவிய நிறுவனங்களுக்கு அனைத்து வகையிலும் ஒத்துழைப்பு வழங்க இந்தியா உறுதி பூண்டுள்ளது. இந்த வரைவு அறிக்கையின் நோக்கமானது பெருங்கடல் பகுதிகளையும், அதன் பல்லுயிர்களையும் பாதுகாப்பதற்கு உலக அளவில் உடன்படிக்கையை ஏற்படுத்துவதாகும் என டாக்டர் ஜிதேந்திர சிங் கோடிட்டுக் காட்டினார்.
---
AP/GS/KPG/KRS
(Release ID: 1901500)
Visitor Counter : 204