சிறப்பு சேவைகள் மற்றும் கட்டுரைகள்
புதுவைப் பல்கலைக்கழகத்தின் 29 வது பட்டமளிப்பு விழா பிப்ரவரி28 அன்று நடைபெறவுள்ளது
प्रविष्टि तिथि:
22 FEB 2023 6:20PM by PIB Chennai
புதுவைப் பல்கலைக்கழகத்தின் 29 வது பட்டமளிப்பு விழா 2023 பிப்ரவரி 28 செவ்வாய் அன்று ஜவஹர்லால் நேரு அரங்கம், டாக்டர் பி ஆர் அம்பேத்கர் நிர்வாக கட்டிடத்தில் நடைபெறவுள்ளது.
இந்தியாவின் துணைக் குடியரசுத் தலைவர் திரு. ஜெக்தீப் தன்கர் சிறப்பு விருந்தினராகக் கலந்துகொண்டு மாணவர்களுக்கு பட்டங்களை வழங்கியும், பட்டமளிப்பு உரையை நிகழ்த்தவும் மற்றும் நான்கு புதிய கல்விக் கட்டடங்களை திறந்து வைக்கவும் இசைந்துள்ளார்.
இந்த 29 வது பட்டமளிப்பு விழாவின் போது, 21,208 புதுவை பல்கலைக்கழக மற்றும் இணைப்புக் கல்லூரி மாணவர்களும் மற்றும் 10,649 தொலைதூர கல்வி மாணவர்களும் என மொத்தம் 31,857 மாணவர்கள் பட்டங்களை பெறவுள்ளனர் அதில் 242 ஆராய்ச்சி மாணவர்களும், பல்வேறு PG/UG பட்ட பிரிவுகளில் முதலிடம் பிடித்து தங்கப் பதக்கங்கள் பெறவுள்ள 187 மாணவர்களும் அடங்குவார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.
29 வது பட்டமளிப்பு விழாவிற்கு தேவையான அனைத்து ஏற்பாடுகளையும் பல்கலைக்கழகம் செய்து வருகிறது என அப்பல்கலைக் கழகம் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்புத் தெரிவிக்கிறது.
****
(रिलीज़ आईडी: 1901493)
आगंतुक पटल : 194
इस विज्ञप्ति को इन भाषाओं में पढ़ें:
English