சிறப்பு சேவைகள் மற்றும் கட்டுரைகள்
பல்கலைக்கழக பொது நுழைவுத் தேர்வு அடிப்படையில் ஒருங்கிணைந்த 5 ஆண்டு முதுநிலை படிப்புகளுக்கு இணையவழியில் விண்ணப்பங்களை புதுச்சேரி பல்கலைக்கழகம் வரவேற்கிறது
இடுகை இடப்பட்ட நாள்:
17 FEB 2023 1:59PM by PIB Chennai
தேசிய தேர்வு முகமையின் (NTA) பொதுப் பல்கலைக்கழக நுழைவுத் தேர்வு CUET (UG) - 2023 அடிப்படையில் புதுவை பல்கலைக்கழகம் வழங்கும் 5 ஆண்டு ஒருங்கிணைந்த முதுநிலைப் படிப்புகளுக்கான இணையவழி விண்ணப்பத்தைச் சமர்ப்பிப்பதற்கான விண்ணப்பப் தளம் 09.02.2023 முதல் திறக்கப்பட்டது.
2022-23 கல்வியாண்டிற்கான ஒருங்கிணைந்த முதுநிலை திட்டங்களில் சேர்க்கை பெற விரும்பும் மாணவர்கள் CUET (UG) - 2023 க்கு https://cuet.samarth.ac.in/. இணையவழில் விண்ணப்பிக்கலாம். www.pondiuni.edu.in/admissions-2023-24/
என்ற முகவரியில் உள்ள திட்டங்களுக்கான தகுதி அளவுகோல்கள் மற்றும் தேவையான பாடம்(கள்) ஆகியவற்றிற்காக பல்கலைக்கழக இணையதளத்தில் உள்ள தகவல் சிற்றேட்டை பார்க்கவும்.
https://cuet.samarth.ac.in/ என்ற தேசிய தேர்வு முகமையின் இணையதளத்தை விண்ணப்பதாரர்கள் தவறாமல் பார்க்க அறிவுறுத்தப்படுகிறார்கள்.
பல்வேறு 5 ஆண்டு ஒருங்கிணைந்த முதுநிலை திட்டங்களுக்கான இணையவழி விண்ணப்பப் படிவத்தைச் சமர்ப்பிப்பதற்கான கடைசி தேதி 12 மார்ச் 2023 ஆகும்.
(வெளியீட்டு அடையாள எண்: 1900136)
வருகையாளர் எண்ணிக்கை : 126