ஜல்சக்தி அமைச்சகம்
புதிய நீர்த்தேக்கங்கள் கட்டுமானம்
தமிழகத்தில் தாமிரபரணி, கருமேனியாறு, நம்பியாறு இணைப்புத் திட்டத்துக்கு மத்திய நிதியுதவி
प्रविष्टि तिथि:
13 FEB 2023 4:32PM by PIB Chennai
தமிழகத்தில் தாமிரபரணி, கருமேனியாறு, நம்பியாறு இணைப்புத் திட்டம் 2021-22-ம் நிதி ஆண்டில் சேர்க்கப்பட்டு, ரூ.44.22 கோடி மத்திய அரசின் நிதியுதவிக்கு அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. இதில் ரூ.9.04 கோடி விடுவிக்கப்பட்டு அந்த நிதி பயன்படுத்தப்பட்டுள்ளது. கன்னடியன் கால்வாயில் இருந்து வெள்ள நீரை வறட்சியால் பாதிக்கப்படும் பகுதிகளுக்கு கொண்டுசெல்லும் வகையில் இந்த இணைப்புத் திட்டம் செயல்படுத்தப்படவுள்ளது.
2017-ம் ஆண்டு முதல் தமிழ்நாட்டுக்கு நீர்வளத் திட்டங்களுக்காக ரூ.186.53 கோடி மத்திய உதவிக்கு அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. 2018-19-ல் ரூ.7.03 கோடியும், 2019-20-ல் ரூ.16.75 கோடியும், 2020-21-ல் ரூ.1.25 கோடியும், 2021-22-ல் ரூ.17.43 கோடியும் விடுவிக்கப்பட்டுள்ளது. 2022-23-ல் இதுவரை ரூ.19.3 கோடி அனுமதிக்கப்பட்டுள்ளது.
நீர்த்தேக்கங்களில் தூர்வாருதல், கரைகளை பலப்படுத்துதல், சீரமைத்தல் ஆகிய பணிகளுக்கு இந்த நிதி பயன்படுத்தப்படுகிறது.
சென்னை நகரைப் பொறுத்தவரை, நிதியுதவிக்கான கருத்துரு எதையும் மத்திய ஜல்சக்தி அமைச்சகம் பெறவில்லை.
இத்தகவலை மாநிலங்களவையில் இன்று மத்திய ஜல்சக்தித்துறை இணையமைச்சர் திரு பிஸ்வேஷ்வர் துடு எழுத்து மூலம் அளித்த பதிலில் இதனைத் தெரிவித்துள்ளார்.
மேலும் விவரங்களுக்கு இந்த ஆங்கிலச் செய்திக் குறிப்பைக் காணவும் https://pib.gov.in/PressReleasePage.aspx?PRID=1898799
***
PKV/AG/RR
(रिलीज़ आईडी: 1898824)
आगंतुक पटल : 260