வீட்டு வசதி மற்றும் நகர்ப்புற வறுமை ஒழிப்பு அமைச்சகம்
நகர்ப்புறம் 20-ஐ உலகளாவிய சக கற்றலுக்கான சிறந்த வாய்ப்பாக பார்க்க வேண்டும்: தொடக்கக் கூட்டத்தில் திரு ஹர்தீப் எஸ் பூரி
प्रविष्टि तिथि:
10 FEB 2023 2:35PM by PIB Chennai
"இந்தியா மற்றும் 'தலைமை நகரம்' அகமதாபாத்தின் வழிகாட்டுதலால், இந்த ஆண்டு நகர்ப்புறம் 20 தொடக்க குழு, நகரங்களால் ஏற்றுக்கொள்ளப்பட்ட கொள்கைகள் மற்றும் நடைமுறைகள், வளர்ச்சியின் உலகளாவிய செயல்திட்டங்களில் சக்திவாய்ந்த தாக்கங்களை ஏற்படுத்துகின்றன என்பதை நிரூபிக்கும் என்று, மத்திய வீட்டுவசதி, நகர்ப்புற விவகாரங்கள் மற்றும் பெட்ரோலியத்துறை அமைச்சர் திரு ஹர்தீப் சிங் பூரி தனது காணொலி செய்தியில் தெரிவித்திருக்கிறார்.
ஜி20 இன் 2023 நகர்ப்புறம் 20 பணிக் குழுவின் தொடக்க நகர ஷெர்பா கூட்டத்தில் அவர், இதனை தெரிவித்துள்ளார்.
தனது காணொலி செய்தியில், இந்த ஆண்டு யு20 உச்சிமாநாட்டின் பொருத்தத்தை தொட்டுக் காட்டிய திரு ஹர்தீப் பூரி, 'வசுதைவ குடும்பகம் - ஒரு பூமி, ஒரு குடும்பம், ஒரு எதிர்காலம்' என்ற கருப்பொருளுடன் எதிரொலிக்கும் என்றார். இந்த ஆண்டு உச்சிமாநாடு பரஸ்பரம் நன்மை பயக்கும் ஒரு கட்டமைப்பாக இருக்கும் என்றும், இதனால் நிலையான சர்வதேச பொருளாதார ஒத்துழைப்பு உருவாகும் என்றும் கூறினார்..
கடந்த சில ஆண்டுகளில் உலக நிர்வாகத்தின் முக்கியப் பிரச்சினைகளில் இந்தியா எவ்வாறு அதிகளவில் வழிநடத்தியுள்ளது என்பதை விரிவாகக் கூறிய அவர், 2014 முதல் இந்தியாவின் நகர்ப்புற புத்துணர்ச்சியின் உருமாற்றக் கதை மற்ற நாடுகளுக்கு, குறிப்பாக உலகளாவிய தெற்கில் இருந்து கற்றுக்கொள்ள ஒரு வரைபடமாக மாறியுள்ளது என்றார்.
நகரங்களின் பொருளாதார ஆற்றலை நிலையான முறையில் பயன்படுத்துவதன் முக்கியத்துவத்தை எடுத்துரைத்த திரு பூரி, பருவநிலை மாற்றம் குறித்து சமீபத்தில் முடிவடைந்த சிஓபி -27 மற்றும் பல்லுயிர் பெருக்கம் தொடர்பான சிஓபி-15 ஆகியவை நகர்ப்புற நெகிழ்ச்சித்தன்மையை அதிகரிக்க வேண்டிய அவசரத் தேவையை மீண்டும் வலியுறுத்தியுள்ளன என்றார்.
விரைவான நகரமயமாக்கலின் சூழலில் சிறந்த திட்டமிடல், கொள்கைகள் மற்றும் நிர்வாகத்தின் மூலம் நீர் பாதுகாப்பை உறுதி செய்வது மிகவும் முக்கியமானது என்று அமைச்சர் வலியுறுத்தினார். இந்த ஆண்டு உச்சிமாநாட்டில் கணிசமான அறிவு சார்ந்த அம்சங்கள் பகிர்ந்து கொள்ளப்படும்.
நகரங்களுக்கான மற்றொரு முக்கியமான கவலை, விரும்பிய சமூகப் பொருளாதார விளைவுகளை வழங்குவதற்காக பாரம்பரிய திட்டமிடல் மாதிரிகளை மறுபரிசீலனை செய்வதாகும். விரிவான உள்கட்டமைப்பு மேம்பாட்டிற்கு முதலீடுகள் மற்றும் நிதியுதவி பற்றிய வலுவான விவாதம் தேவைப்படும் என்று அவர் மேலும் கூறினார்.
பருவநிலை நிதியை விரைவுபடுத்த உறுதியான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டாலும், இந்த நகர்ப்புற 20 குழுவானது புதுமையான நிதிக் கருவிகளைக் கருத்திற்கொள்ளும் மன்றமாக இருக்கும் என்று அமைச்சர் நம்பிக்கை தெரிவித்தார்.
குஜராத் முதலமைச்சர் திரு பூபேந்திரபாய் படேல், அகமதாபாத் மேயர், திரு கிரித்குமார் ஜே பர்மர், இந்தியாவின் ஜி20 ஷெர்பா, ஸ்ரீ அமிதாப் காந்த், உள்ளிட்ட முக்கிய பிரமுகர்கள் தொடக்க விழாவில் கலந்து கொண்டனர். ஸ்ரீ படேல் தனது முக்கிய உரையில், யுனெஸ்கோவின் உலக பாரம்பரிய நகரமான அகமதாபாத்தின் வளமான நகர்ப்புற மரபுகளை எடுத்துரைத்தார்.
இந்தியாவின் ஜி20 ஷெர்பா, திரு அமிதாப் காந்த், யு20 பணிக் குழுவின் முக்கியத்துவம் குறித்த தனது எண்ணங்களைப் பகிர்ந்து கொண்டார்.
***
SMB/PKV/RJ/KPG
(रिलीज़ आईडी: 1898096)
आगंतुक पटल : 263