கனரகத் தொழில்கள் அமைச்சகம்
azadi ka amrit mahotsav

தற்சார்பு இந்தியா இலக்கை அடைய ஏதுவாக மத்திய கனரக தொழிற்சாலை அமைச்சகம் உற்பத்தியுடன் இணைந்த ஊக்கத்தொகை திட்டங்களை அறிமுகப்படுத்தியுள்ளது

Posted On: 10 FEB 2023 3:27PM by PIB Chennai

தற்சார்பு இந்தியா இலக்கை அடைய ஏதுவாக மத்திய கனரக தொழிற்சாலை அமைச்சகம் உற்பத்தியுடன் இணைந்த ஊக்கத்தொகை திட்டங்களை அறிமுகப்படுத்தியுள்ளது. அவை, மோட்டார் வாகனம் மற்றும் உதிரிபாகங்கள் உற்பத்தி செய்யும் தொழிற்சாலைகள் மற்றும் ஏசிசி பேட்டரி ஸ்டோரேஜ் தேசிய இயக்கம் ஆகியவற்றுக்கு பொருந்தும். இதனை மத்திய கனரக தொழிற்சாலை துறை இணையமைச்சர் திரு கிருஷ்ணன் பால் குர்ஜார் மாநிலங்களவையில் எழுத்துப்பூர்வமாக அளித்த பதிலில் தெரிவித்துள்ளார்.

(i) வாகனம் மற்றும் வாகன உதிரிபாகங்கள் உற்பத்தி தொழிற்சாலைக்கான உற்பத்தியுடன் இணைந்த ஊக்கத்தொகை திட்டம்: வாகன உற்பத்தித் துறையில் இந்தியாவின் உற்பத்தித் திறனை மேம்படுத்த ஏதுவாக இந்தத் திட்டம் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.  2022-23 நிதியாண்டு முதல் 2026-27 நிதியாண்டு வரையிலான 5 ஆண்டு திட்டத்திற்கு மொத்தம் ரூ.25,938 கோடி செலவிடப்படவுள்ளது. இந்த திட்டத்தின் மூலம் 1.45 லட்சம் பேருக்கு நேரடி வேலைவாய்ப்பு கிடைக்கும் எனவும்  இந்த 5 ஆண்டுகளில் ரூ.2,31,500 கோடி அளவுக்கு விற்பனை செய்யப்படலாம் எனவும் எதிர்பார்க்கப்படுகிறது.

 

***

SMB/ES/UM/RR


(Release ID: 1897975) Visitor Counter : 166


Read this release in: English , Hindi , Telugu