ஜல்சக்தி அமைச்சகம்

உள்நாட்டு நீர்வழிப் போக்குவரத்தை ஊக்கப்படுத்த தேசிய நீர்வழி மேம்பாடு

தமிழ்நாட்டில் 10 உட்பட நாடு முழுவதும் 111 நீர்வழிப் பாதைகள் மத்திய ஆணையத்தால் அறிவிக்கப்பட்டுள்ளன

Posted On: 09 FEB 2023 1:12PM by PIB Chennai

உள்நாட்டு நீர்வழிப் போக்குவரத்தை மேம்படுத்த 24 மாநிலங்களில் 111 நீர்வழிப் பாதைகள் அறிவிக்கப்பட்டுள்ளன. தேசிய நீர்வழிப் பாதைகள் சட்டம் 2016-ன் படி இதற்கான பட்டியல் தயாரிக்கப்பட்டுள்ளது.

இதன்படி தமிழ்நாட்டில் தேசிய நீர்வழிப் பாதை 4-ல், வடக்கு பக்கிங்காம் கால்வாய் (பெத்தகஞ்சம் முதல் சென்னை மத்திய ரயில் நிலையம் வரை -316 கிலோ மீட்டர்), தெற்கு பக்கிங்காம் கால்வாய் (சென்னை மத்திய ரயில் நிலையம் முதல் மரக்காணம் வரை -110 கிலோ மீட்டர்), மரக்காணம் முதல் புதுச்சேரி வரை (கழுவேலிக் குளம் வழியாக -22 கிலோ மீட்டர்) இடம் பெற்றுள்ளது.

தேசிய நீர்வழிப் பாதை 20-ல் பவானி ஆறு (95 கிலோ மீட்டர்), 55-ல் காவேரி-கொள்ளிடம் ஆறு (311 கிலோ மீட்டர்), 69-ல் மணிமுத்தாறு (5 கிலோ மீட்டர்), 75-ல் பாலாறு (142 கிலோ மீட்டர்), 77-ல் பழையாறு (20 கிலோ மீட்டர்), 80-ல் பொன்னியாறு (126 கிலோ மீட்டர்), 99-ல் தாமிரபரணி ஆறு (62 கிலோ மீட்டர்) ஆகியவை நீர்வழிப் பாதைகளாக அறிவிக்கப்பட்டுள்ளன என்று மக்களவையில் இன்று எழுத்து மூலம் அளித்த பதிலில் ஜல்சக்தித் துறை இணையமைச்சர் திரு பிரகலாத் சிங் படேல் தெரிவித்தார்.

(Release ID: 1897616)

***

AP/SMB/RJ/KPG



(Release ID: 1897641) Visitor Counter : 147