பெண்கள் மற்றும் குழந்தை நலன் அமைச்சகம்
பிரதமரின் மாத்ரு வந்தனா யோஜனா திட்டத்தின்கீழ், பயனாளிகளின் வங்கி / அஞ்சல் சேமிப்புக் கணக்கில் நேரடியாக ஊக்கத்தொகை ரூ.5,000 செலுத்தப்படுகிறது
கடந்த 3 ஆண்டுகளில் தமிழகத்தில் 12.68 லட்சம் பேர் பயனடைந்துள்ளனர்
இடுகை இடப்பட்ட நாள்:
08 FEB 2023 4:43PM by PIB Chennai
பிரதமரின் மாத்ரு வந்தனா யோஜனா திட்டத்தின்கீழ், பயனாளிகளின் வங்கி / அஞ்சல் சேமிப்புக் கணக்கில் நேரடியாக ஊக்கத்தொகை ரூ.5,000 செலுத்தப்படுகிறது.
இத்திட்டத்தை மத்திய பெண்கள் மற்றும் குழந்தைகள் நல அமைச்சகம் செயல்படுத்துகிறது.
தமிழ்நாட்டை பொறுத்தமட்டில், கடந்த 2019-20 ஆம் ஆண்டு காலக்கட்டத்தில் 5,24,185 பேருக்கும், 2020-21 ஆம் ஆண்டில் 4,69,571 பேருக்கும், 2021-22 ஆம் ஆண்டில் 2,74,703 பேருக்கும் இத்திட்டத்தின்கீழ் நிதியுதவி வழங்கப்பட்டது.
இந்தத் தகவலை மாநிலங்களவையில் இன்று மத்திய மகளிர் மற்றும் குழந்தைகள் மேம்பாட்டுத்துறை அமைச்சர் திருமதி ஸ்மிருதி சுபின் இரானி எழுத்துப்பூர்வமாக அளித்த பதிலில் தெரிவித்துள்ளார்.
மேலும் விவரங்களுக்கு இந்த ஆங்கில செய்திக்குறிப்பை காணலாம்: https://pib.gov.in/PressReleasePage.aspx?PRID=1897357
***
AP/GS/UM/GK
(வெளியீட்டு அடையாள எண்: 1897450)
வருகையாளர் எண்ணிக்கை : 203