சுகாதாரம் மற்றும் குடும்ப நலத்துறை அமைச்சகம்

இந்தியாவில் துணை மருத்துவப் பணியாளர்கள்

Posted On: 07 FEB 2023 3:29PM by PIB Chennai

தேசிய  ஹெல்த்கேர் தொழில்களுக்கான எந்தவொரு மத்திய ஒழுங்குமுறை அமைப்பும் இல்லாத நிலையில், மத்திய அரசு 2021 ஆம் ஆண்டு மார்ச் 28 ஆம் தேதி, சுகாதாரப் பாதுகாப்பு நிபுணர்களின் கல்வி மற்றும் சேவைகளை ஒழுங்குபடுத்துவதற்காக தேசிய கூட்டு மற்றும் சுகாதாரத் தொழில்களுக்கான ஆணையச்  சட்டத்தை இயற்றியது; சீரான தரநிலைகள் மற்றும் தர உத்தரவாதத்தை உறுதி செய்வதற்காக அனைத்து தொடர்புடைய மற்றும் சுகாதார நிறுவனங்களின் மதிப்பீடு, மாநில பதிவுகளை பராமரித்தல் ஆகியற்றுக்கு  இச்சட்டம் வகை செய்கிறது.

மருத்துவர்கள், செவிலியர்கள் மற்றும் துணை மருத்துவ பணியாளர்களின் திறன் மேம்பாட்டிற்கான ஏற்பாடு, மத்திய அரசு திட்டத்தின் கீழ், அவசர மருத்துவ சேவைகளுக்கான மனிதவள மேம்பாடு, துணை மருத்துவ பணியாளர்கள், அவசர மருத்துவ தொழில்நுட்ப வல்லுனர்களின் திறன் அடிப்படையிலான பயிற்சி ஆகியவை வழங்கப்படுகின்றன.

மத்திய சுகாதாரம் மற்றும் குடும்ப நலத்துறை இணை அமைச்சர் டாக்டர் பாரதி பிரவின் பவார் இன்று மாநிலங்களவையில்  எழுத்துப்பூர்வமாக அளித்த பதிலில் இதனை தெரிவித்தார்.

***

(Release ID: 1896952)

AP’PKV/GK



(Release ID: 1897024) Visitor Counter : 113


Read this release in: English , Urdu , Gujarati , Telugu