நுகர்வோர் நலன், உணவு மற்றும் பொது விநியோகம் அமைச்சகம்
தேசிய உணவுப் பாதுகாப்புச் சட்டத்தின் கீழ் முன்னுரிமை பொது விநியோகத் திட்டப் பயனாளிகளுக்கும் அந்த்யோதயா அன்னயோஜனா திட்டப் பயனாளிகளுக்கும் ஜனவரி 1, 2023 முதல் இலவச உணவு தானியங்கள் வழங்கப்படுகின்றன
Posted On:
03 FEB 2023 3:31PM by PIB Chennai
பிரதமரின் ஏழைகளுக்கான உணவுத்திட்டத்தின் 4-வது கட்டம் 31.12.2022 வரை செயல்பாட்டில் இருந்தது. தேசிய உணவுப் பாதுகாப்புச் சட்டத்தை திறம்பட செயல்படுத்தவும், ஏழைகளின் நிதிச்சுமையைக் குறைக்கவும் அந்த்யோதயா அன்னயோஜனா மற்றும் முன்னுரிமை பொது விநியோகத் திட்டப் பயனாளிகளுக்கும் ஜனவரி 1, 2023 முதல் ஓராண்டுக்கு உணவு தானியங்களை இலவசமாக வழங்க மத்திய அரசு முடிவு செய்து அதை செயல்படுத்தி வருகிறது.
பிரதமரின் ஏழைகளுக்கான நல உணவுத் திட்டத்தின் 1 முதல் 4-ம் கட்டம் வரை, உணவு மானியம், மானியங்களுக்கு இடையிலான போக்குவரத்து, உணவு தானியங்களை கையாளுதல், நியாயவிலைக் கடை முகவர்களுக்கான தொகை என அனைத்தும் மத்திய அரசால் ஏற்கப்பட்டது.
இந்தத் தகவலை மத்திய நுகர்வோர் விவகாரங்கள் மற்றும் உணவுத் துறை இணை அமைச்சர் திரு அஸ்வினி குமார் சௌபே மாநிலங்களவையில் கேள்வி ஒன்றுக்கு எழுத்துபூர்வமாக அளித்த பதிலில் தெரிவித்துள்ளார்.
***
AP/PLM/KPG/RJ
(Release ID: 1896087)
Visitor Counter : 208