நுகர்வோர் நலன், உணவு மற்றும் பொது விநியோகம் அமைச்சகம்
நாட்டின் இ-தாகில் இணையதளத்தின் மூலம் 24.01.2023 வரை மொத்தம் 35,898 நுகர்வோர் புகார்கள் தாக்கல் செய்யப்பட்டுள்ளன
प्रविष्टि तिथि:
03 FEB 2023 3:33PM by PIB Chennai
நுகர்வோர் பாதுகாப்புச் சட்டம் 2019, நுகர்வோரின் புகார்களை இணையதளம் மூலமாக தாக்கல் செய்யும் வசதிகளை வழங்குகிறது. நுகர்வோர் பாதுகாப்பு விதிகளின்படி தேசிய ஆணையம், மாநிலங்கள் ஆணையம் மற்றும் மாவட்ட ஆணையம் ஆகியவற்றில் புகார்களை அளிக்கலாம். இதற்கென இ-தாகில் (e-Daakhil) என்ற இணையதளம் உருவாக்கப்பட்டுள்ளது. 34 மாநிலங்கள்மற்றும் யூனியன் பிரதேசங்களிலிலிருந்து புகார்களை தாக்கல் செய்யும் வசதி ஏற்படுத்தப்பட்டுள்ளது.
இந்த இணைய தளத்தின் மூலம் இது வரை 29,553 புகார்கள் தாக்கல் செய்யப்பட்டு 10,878 புகார்கள் பதிவு செய்யப்பட்டுள்ளன. இவை அனைத்தையும் சேர்த்து 35,898 புகார்கள் இதன் மூலம் தாக்கல் செய்யப்பட்டு இதில் ஹ1,810 புகார்களுக்கு தீர்வு காணப்பட்டுள்ளன. தமிழகத்தைப் பொறுத்தவரை 638 புகார்கள் தாக்கல் செய்யப்பட்டு 42 புகார்கள் பதிவு செய்யப்பட்டு 12 புகார்களுக்கு தீர்வு காணப்பட்டுள்ளது. இந்தத் தகவலை மத்திய நுகர்வோர் விவகாரங்கள் துறை இணை அமைச்சர் திரு அஸ்வினி குமார் சௌபே மாநிலங்களவையில் கேள்வி ஒன்றுக்கு எழுத்துபூர்வமாக அளித்த பதிலில் தெரிவித்துள்ளார்.
***
AP/PLM/KPG/RJ
(रिलीज़ आईडी: 1896086)
आगंतुक पटल : 149