வணிகம் மற்றும் தொழில்துறை அமைச்சகம்

2020-21 –ஆம் ஆண்டைவிட 2021-22-ஆம் நிதியாண்டில் வாகனங்கள் ஏற்றுமதி 35.9% உயர்வு

Posted On: 03 FEB 2023 1:47PM by PIB Chennai

2020-21 –ஆம் ஆண்டைவிட 2021-22-ஆம் நிதியாண்டில் வாகனங்கள் ஏற்றுமதி 35.9% அதிகரித்துள்ளது. 2020-21-ஆம் நிதியாண்டில் மொத்தம் 41,34,047 வாகனங்கள் ஏற்றுமதி செய்யப்பட்ட நிலையில், 2021-22-ஆம் நிதியாண்டில், 56,17,246 வாகனங்கள் ஏற்றுமதி செய்யப்பட்டுள்ளன. இது 35.9% உயர்வாகும். இதில் கார்களைப் பொறுத்தவரையில் 2020-21-ஆம் நிதியாண்டில் 4,04,394 என்ற எண்ணிக்கையில் ஏற்றுமதி செய்யப்பட்டன. 2021-22-ஆம் நிதியாண்டில், 5,27,875 வாகனங்கள் ஏற்றுமதி செய்யப்பட்டதன் மூலம் கார்களின் ஏற்றுமதி 42.9% அதிகரித்த வணிக வாகனங்களின் ஏற்றுமதி 50,334-லிருந்து 92,297 ஆக அதிகரித்ததன் மூலம் 83.36% உயர்வை எட்டியுள்ளது.  இருசக்கர வாகனங்களின் ஏற்றுமதி முந்தைய நிதியாண்டில் 32,82,786ஆக இருந்தது. கடந்த நிதியாண்டில் இது 44,43,018 ஆக அதிகரித்தது. இது 35.3% உயர்வாகும். வணிக வாகனங்கள், 3 சக்கர வாகனங்கள் உள்ளிட்ட அனைத்து வாகனங்களின் ஏற்றுமதியும் கடந்த நிதியாண்டில் அதிகரித்துள்ளது. இந்தத் தகவலை நாடாளுமன்றத்தில், எழுத்துபூர்வமாக அளித்த பதிலில் மத்திய வர்த்தகத் துறை இணை அமைச்சர் திருமதி அனுப்ரியா பாட்டீல் தெரிவித்துள்ளார்.

------

PKV/PLM/KPG/RJ

 

 



(Release ID: 1896048) Visitor Counter : 123


Read this release in: Marathi , English