நுகர்வோர் நலன், உணவு மற்றும் பொது விநியோகம் அமைச்சகம்
azadi ka amrit mahotsav

மின்னணு ஏலம் மூலம் இரண்டு நாட்களில் 9.2 லட்சம் மெட்ரிக் டன் கோதுமையை இந்திய உணவுக் கழகம் விற்பனை செய்துள்ளது

प्रविष्टि तिथि: 03 FEB 2023 1:07PM by PIB Chennai

நாட்டில் அதிகரித்து வரும் கோதுமை மற்றும் ஆட்டா விலையை சமாளிக்கும் வகையில், அமைச்சர்கள் குழுவின் பரிந்துரையின்படி, இந்திய உணவுக் கழகம், பிப்ரவரி 1,2 ஆகிய இரண்டே நாட்களில், கையிருப்பில் இருந்த 24 லட்சம் மெட்ரிக் டன் கோதுமையில் 22 லட்சம் மெட்ரிக் டன்னை மின்னணு ஏலம் மூலம் விற்பனை செய்துள்ளது.

மின் ஏலத்தில் முதல் வாரத்தில் 1150-க்கும் மேற்பட்ட ஏலதாரர்கள்  கலந்து கொண்டனர்.  நாடு முழுவதும் 9.2 லட்சம் மெட்ரிக் டன் கோதுமை விற்பனையானது.

மேலும், மின்னணு ஏலம் மூலம் நாடு முழுவதும் கோதுமை விற்பனை. 2023 மார்ச் மாதம் 2-வது வாரம் வரை ஒவ்வொரு புதன்கிழமையும்  தொடரும்.  

மின் ஏலத்தின் முதல் வாரத்தில், 100 முதல் 499 மெட்ரிக் டன்கள் வரை அதிகபட்ச தேவை இருந்தது, அதைத் தொடர்ந்து 500-1000 மெட்ரிக் டன்கள், அதைத் தொடர்ந்து 50-100 மெட்ரிக் டன்  என விற்பனை செய்யப்பட்டது.  சிறிய மற்றும் நடுத்தர மாவு ஆலைகள் மற்றும் வியாபாரிகள் ஏலத்தில் தீவிரமாக பங்கேற்றனர். அதிகபட்சமாக 3000 மெட்ரிக் டன்னை 27 ஏலதாரர்கள் ஒரே தவணையில் பெற்றப்பட்டது.

***

AP/PKV/AG/RJ

 


(रिलीज़ आईडी: 1896019) आगंतुक पटल : 222
इस विज्ञप्ति को इन भाषाओं में पढ़ें: English , Marathi , हिन्दी , Gujarati