ஜல்சக்தி அமைச்சகம்
azadi ka amrit mahotsav

மழைநீர் சேகரிப்பு தொடர்பான முன்முயற்சியில் பொதுமக்கள் பங்களிப்பு

இடுகை இடப்பட்ட நாள்: 02 FEB 2023 4:55PM by PIB Chennai

மாநில அரசுகளின் நீர் பாதுகாப்பு மற்றும் மேம்பாட்டு நடவடிக்கைகளுக்கு மத்திய அரசு தொழில்நுட்பம் மற்றும் நிதி ஆதாரம் தொடர்பாக பல்வேறு செயல்பாடுகளுக்கு பக்கபலமாக இருக்கின்றது. மக்கள் பங்களிப்பு மற்றும் மாநில அரசுகளின் திட்டங்கள் மூலமாக மழைநீர் சேகரிப்புத் தொடர்பான பல்வேறு திட்டங்களை மத்திய அரசு செயல்படுத்தி வருகிறது. கடந்த 2019ம் ஆண்டில் 'ஜல் சக்தி அபியான்'- மழை நீர் சேகரிப்பு பிரச்சாரத்தின் மூலம் நீர் பாதுகாப்பு மற்றும் நீர் ஆதார மேலாண்மை போன்றவற்றின் மீது அதிக கவனம் செலுத்தப்பட்டது. அதன் விளைவாக நம் நாட்டில் உள்ள வறட்சியான 256 மாவட்டங்களிலுள்ள 1,592 வட்டங்களில் இந்தத் திட்டம் சிறப்பாக செயல்படுத்தப்பட்டு வருகிறது.

இந்தத் திட்டத்தின் மூன்றாவது கட்டமாக "மழையை சேகரியுங்கள் எங்கேயும் எப்போதும்" என்ற கருப்பொருளில் நம் நாட்டில் உள்ள அனைத்து மாவட்டங்களிலும் (ஊரக மற்றும் நகர்புறங்கள்) அனைத்து மாவட்டங்களிலும் இந்தப் பிரச்சார நடவடிக்கை கடந்த 2022ம் ஆண்டு  தொடங்கப்பட்டுள்ளது.

இந்த தகவலை ஜல் சக்தி இணை அமைச்சர் திரு.பிஷ்வேஸ்வர் துடு இன்று மக்களவையில் கேட்கப்பட்ட கேள்விக்கு எழுத்துப்பூர்வமாக பதிலளித்துள்ளார்.

***

AP/GS/SG/RJ

 


(வெளியீட்டு அடையாள எண்: 1895802) வருகையாளர் எண்ணிக்கை : 169
இந்த வெளியீட்டை படிக்க: English , Urdu