ஜல்சக்தி அமைச்சகம்
azadi ka amrit mahotsav

பிரதமரின் வேளாண் நுண்ணீர் பாசனத் திட்டத்தின் கீழ் அதிகரித்துள்ள சாகுபடி பரப்பு

प्रविष्टि तिथि: 02 FEB 2023 4:56PM by PIB Chennai

பிரதமரின் வேளாண் நுண்ணீர் பாசனத் திட்டத்தின் கீழ் சாகுபடி பரப்பு அதிகரித்துள்ளதாகவும் 2016-2022 காலத்தில் 16.42 லட்சம் ஹெக்டேர் இந்த திட்டத்தின் கீழ், வந்துள்ளதாகவும் ஜல்சக்தித்துறை இணை அமைச்சர் திரு பிஷ்வேஸ்வர் டூடு தெரிவித்துள்ளார்.

இந்தத் திட்டம் நீர் மேலாண்மை, நீர் நிலைகள், புனரமைத்தல், நிலத்தடி நீர் மேம்பாடு உள்ளிட்ட துணைத்திட்டங்களையும் கொண்டிருப்பதாக மக்களவையில் இன்று எழுத்து மூலம் அளித்த பதிலில் அவர் தெரிவித்தார்.

நீர்ப்பிடிப்புப் பகுதி, மேம்பாட்டுத்திட்டம், நிலவளத் துறையின் மூலம், அமலாக்கப்படுவதாக அவர் கூறினார். 2016-2022 காலத்தில் 1,134 நீர்நிலைப் பணிகள் முடிக்கப்பட்டு 131.15 மில்லியன் கனமீட்டர் தண்ணீர் சேகரிக்கப்பட்டுள்ளது. 2022 ஜூன் மாதம் வரை நிலத்தடி நீர் மேம்பாட்டுத் திட்டத்தின் கீழ் 27,962 கிணறுகள் தோண்டப்பட்டு 70,890 ஹெக்டேர் நீர்ப்பாசன வசதி பெற்றுள்ளதாகவும் அமைச்சர் கூறினார்.

-----  

AP/SMB/KPG/RJ


(रिलीज़ आईडी: 1895801) आगंतुक पटल : 182
इस विज्ञप्ति को इन भाषाओं में पढ़ें: English , Urdu