உள்நாட்டு விமானப் போக்குவரத்து அமைச்சகம்
azadi ka amrit mahotsav

உள்நாட்டு விமானப் போக்குவரத்து நடப்பு நிதியாண்டில் (2022-23) மீண்டும் அதிகரித்துள்ளது இது கொவிட் முந்தைய நிலையில் 97 சதவீதத்தை அடையும் என்று எதிர்பார்க்கப்படுகிறது

Posted On: 02 FEB 2023 4:06PM by PIB Chennai

கடந்த 2014-15ம் நிதியாண்டு முதல் 2019-20ம் நிதியாண்டு காலத்தில் உள்நாட்டு விமான பயணிகள் போக்குவரத்து 14.5 சதவீத வளர்ச்சியை கண்டுள்ளது. 2020-21 மற்றும் 2021-22 ஆண்டுகளில் கொவிட் தொற்று காரணமாக உள்நாட்டு விமானப் போக்குவரத்து குறைவாக இருந்தது.  தற்போது, உள்நாட்டு விமானப் போக்குவரத்து நடப்பு நிதியாண்டில் (2022-23) மீண்டும் அதிகரித்துள்ளது. இது கொவிட் முந்தைய நிலையில் 97 சதவீதத்தை அடையும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

விமானப் போக்குவரத்து உள்கட்டமைப்பை மேம்படுத்த அடுத்த 5 ஆண்டுகளில் சுமார் ரூபாய் 98 ஆயிரம் கோடி செலவாகும் என்று மதிப்பிடப்பட்டுள்ளது.

இத்தகவலை விமானப்போக்குவரத்துத் துறை இணையமைச்சர் ஓய்வு பெற்ற ஜெனரல் வி கே சிங் மக்களவையில் இன்று தெரிவித்தார்.

***

AP/IR/RS/RR


(Release ID: 1895789) Visitor Counter : 183


Read this release in: English , Urdu