சிறப்பு சேவைகள் மற்றும் கட்டுரைகள்
“உத்தியோக் உட்சவ்” என்ற தலைப்பில் ஒருநாள் கருத்தரங்கு
Posted On:
30 JAN 2023 4:13PM by PIB Chennai
புதுச்சேரி பல்கலைக்கழகத்தின் சமுகப்பணித்துறையும் அவதார் மனிதவள நிறுவனத்தின் ப்ராஜெக்ட் புத்ரி திட்டமும் இணைந்து “உத்தியோக் உட்சவ், 2023” (ஏழாவது பதிப்பு) என்னும் ஒரு நாள் கருத்தரங்கு நிகழ்ச்சி நடத்தப்பெற்றது. புதுச்சேரி அரசுப் பள்ளிகளில் பயிலும் பெண் குழந்தைகளுக்கு மேற்கல்விப்படிப்புகள், வேலைவாய்ப்புகள் மற்றும் தொழிற்பாதைகளை குறித்த இம்மாபெரும் நிகழ்ச்சி புதுச்சேரி பல்கலைக்கழக மாநாடு மற்றும் கலாச்சார மையம், அரங்கத்தில் நடைபெற்றது.
இந்த வரவேற்புரை நிகழ்ச்சியில் சமூகப்பணித் துறையின் தலைவர் டாக்டர் கே. அன்பு, நிகழ்ச்சியில் பங்கேற்று சிறப்பித்த புதுச்சேரி பல்கலைக்கழகத்தின் துணைவேந்தர் பேராசிரியர் குர்மீத் சிங்கிற்கும், அவ்தார் மனிதவள அறக்கட்டளையின் நிர்வாக அறங்காவலருமான டாக்டர் சௌந்தர்யா ராஜேஷ் அவர்களுக்கும் நன்றி தெரிவித்தார். இந் நிகழ்ச்சியினை ஒருங்கிணைத்த பேராசிரியர் ஏ. ஷாஹீன் சுல்தானா மற்றும் ஆசிரியர்கள், மாணவர்கள் அனைவரையும் அவர் வரவேற்றார்.
இந்த நிகழ்ச்சிக்கு ஆதரவளித்த மாண்புமிகு துணை வேந்தருக்கு நன்றி தெரிவித்த டாக்டர் சௌந்தர்யா ராஜேஷ், இந்நிகழ்ச்சியினை சிறப்பித்த துறை தலைவர், திட்ட ஒருங்கிணைப்பாளர், பள்ளிகள், ஆசிரியர்கள், குழந்தைகள் மற்றும் அனைவர்க்கும் தனது நன்றியினை தெரிவித்தார்
இந்த நிகழ்ச்சியை ஒருங்கிணைத்ததிற்காக சமூகப்பணித் துறை மற்றும் புத்ரி திட்டத்தினை குறித்தும் பல்கலைக்கழக துணை வேந்தர்,பேராசிரியர் குர்மீத் சிங் பாராட்டு தெரிவித்தார். தாய்மொழியின் முக்கியத்துவத்தை வலியுறுத்திய அவர், தாய்மொழியில் கற்பது பல அனுகூலங்களைக் கொண்டுள்ளது என்பதையும், பள்ளி குழந்தைகளின் தேவைகேற்ப அதனுடன் பெண்குழந்தைகளுக்கென்றே வேலைவாய்ப்பு மற்றும் மேற்படிப்புகளுக்கென இந்நிகழ்ச்சி அமைந்துள்ளதால் தனது பாராட்டுதலை தெரிவித்தார் .
இந்நிகழ்ச்சியினை ஒருங்கிணைத்ததற்காக நன்றி தெரிவித்த அவர், இது போன்ற நிகழ்ச்சிகள் மேலும் எதிர்காலத்தில் நடைபெறும் என்றும், இதற்கு முழுமையான ஆதரவு கிடைக்கும் என்றும் நம்பிக்கை தெரிவித்தார். புதுச்சேரி அரசுப் பள்ளிகளைச் சேர்ந்த 300-க்கும் மேற்பட்ட பள்ளி மாணவர்களுடன் இந்நிகழ்ச்சி ஒருங்கிணைக்கப்பட்டிருப்பதை குறிப்பிட்டு பாராட்டினார்.
இதற்கு பின்னர் கல்விக்கூடங்கள் தங்களது பாராட்டத்தக்க சாதனைகளுக்காக கௌரவிக்கப்பட்டனர். தொடர்ந்து நிகழ்ச்சி ஒருங்கிணைப்பாளர் பேராசிரியர் ஏ. ஷாஹீன் சுல்தானா, சமூகப்பணித் துறையுடன் புத்ரி திட்டம் இணைந்து எவ்வாறு இந்நிகழ்ச்சி செயல்படுத்தப்பட்டது என்பதையும், பள்ளியில் படிக்கும் பெண்களுக்கு உத்யோக நோக்கமும் தொழிற் வழிகாட்டுதலும் இன்றியமையாதது என்றும் . இதற்கென பல்வேறு துறைகளில் இருந்து அவர்களுக்கு விழிப்புணர்வை ஏற்படுத்த உள்ளதாகவும் குறிப்பிட்டார்
மேலும் இந்நிகழ்ச்சியில் பங்கேற்ற பள்ளி, மாணவிகள், பேராசிரியா்கள், அலுவலா்கள் உள்ளிட்டோருக்கு அவா் நன்றி தெரிவித்தார். இந்நிகழ்வுடன் தொடக்க விழா நிறைவு பெற்றது. இதன் பின்னர் கல்வி மற்றும் கார்பொரேட் நிறுவனங்களின் கருத்தரங்கு நிகழ்ச்சிகளுடன் இனிதே
*************
(Release ID: 1894710)
Visitor Counter : 146