மனித வள மேம்பாட்டு அமைச்சகம்
azadi ka amrit mahotsav

வீர் கதா 2.0 போட்டியில் விருதுபெற்ற 25 பேருக்கு திரு ராஜ்நாத் சிங், திரு தர்மேந்திர பிரதான் ஆகியோர் பாராட்டு

Posted On: 25 JAN 2023 5:22PM by PIB Chennai

குடியரசு தினத்தையொட்டி, புதுதில்லியில் இன்று நடைபெற்ற வீர் கதா 2.0 போட்டியில் வெற்றி பெற்ற 25 பேருக்கு பாதுகாப்புத் துறை அமைச்சர் திரு ராஜ்நாத் சிங், கல்வி அமைச்சர் திரு தர்மேந்திர பிரதான் ஆகியோர்  பாராட்டு தெரிவித்துள்ளனர்.

பாதுகாப்பு அமைச்சகம், கல்வி அமைச்சகம் ஆகியவை இணைந்து விடுதலையின் அமிர்தப் பெருவிழாவின் ஒரு பகுதியாக கடந்த ஆண்டு வீர் கதா முதல் அத்தியாயத்தை வெற்றிகரமாக ஏற்பாடு செய்தன. அதன் இரண்டாவது அத்தியாயம் இன்று நடைபெற்றது.

இதில் வெற்றிப்பெற்றவர்களுக்கு ரூ. 10 ஆயிரம் ரொக்கப்பரிசு, பதக்கம், சான்றிதழ் ஆகியவற்றை திரு ராஜ்நாத் சிங் வழங்கினார். கல்வி அமைச்சர் திரு தர்மேந்திர பிரதான், பாதுகாப்புத்துறை இணையமைச்சர் திரு அஜய் பட் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

2023-01-25 16:36:57.799000

முப்படைகளின் தலைமைத் தளபதி ஜென்ரல் அனில் சௌகான், விமானப்படை தளபதி ஏர் சீப் மார்ஷல் வி ஆர் சௌத்ரி, கடற்படை தளபதி அட்மிரல் ஆர் ஹரிகுமார், ராணுவ தளபதி ஜெனரல் மனோஜ் பாண்டே, பாதுகாப்புத் துறை செயலர் திரு கிரிதர் அரமானே ஆகியோரும் நிகழ்ச்சியில் கலந்துகொண்டனர்.  நூற்றுக்கும் மேற்பட்ட தேசிய மாணவர் படையினர்,  ராணுவ பள்ளிகள், கன்டோன்மென்ட் வாரியங்களின் மாணவர்களும், 500க்கும் மேற்பட்ட பள்ளிகளைச் சேர்ந்த மாணவர்கள் மற்றும் ஆசிரியர்கள் மெய்நிகர் வடிவில் கலந்து கொண்டனர்.

2023-01-25 16:36:58.016000

வெற்றிபெற்றவர்களை பாராட்டிய பாதுகாப்புத்துறை அமைச்சர் அவர்களது வீரம், தீரம், படைப்பாற்றல் ஆகியவற்றை புகழ்ந்துரைத்தார். இளைய தலைமுறையினர் புதிய மற்றும் சிறந்த பாதையை வழங்குவதுடன், நாட்டுக்கும், சமுதாயத்திற்கும் சேவைப்புரிவார்கள் என்று அவர் நம்பிக்கை தெரிவித்தார்.

வீர் கதா நிகழ்ச்சி, மாணவர்களிடையே தேசப்பற்றை ஊட்டுவதாக கூறிய திரு ராஜ்நாத் சிங், இது மாணவர்களிடையே கல்வியையும், பண்பையும், வீரத்தையும் வளர்க்கும் என்று குறிப்பிட்டார்.

நிகழ்ச்சியில் பேசிய அமைச்சர் திரு பிரதான், மாணவர்களின் படைப்பாற்றல் திறன் ஊக்கமளிப்பதாக உள்ளது என்று கூறினார். அவர்களது தீரச்செயல்கள், நாட்டு நிர்மாணத்திற்கு பெருமளவில் பயன்படும் என்று நம்பிக்கை தெரிவித்தார்.

**

AP/PKV/RS/KRS


(Release ID: 1893703) Visitor Counter : 133


Read this release in: English , Urdu