வணிகம் மற்றும் தொழில்துறை அமைச்சகம்
azadi ka amrit mahotsav g20-india-2023

ஜி20 - ஸ்டார்ட்அப் 20 பணிக் குழுவின் ஆலோசனைக் கூட்டத்திற்கு ஹைதராபாத்தில் ஏற்பாடு; ஸ்டார்ட்அப் நிறுவனங்களுக்கு சர்வதேச அளவிலான ஆதரவை இந்தியா திரட்டுகிறது

Posted On: 25 JAN 2023 1:49PM by PIB Chennai

ஜி20 - ஸ்டார்ட்அப் 20 பணிக்குழுவின் ஆலோசனைக் கூட்டம்  ஜனவரி 28, 29 ஆம் தேதிகளில் ஹைதராபாத்தில் நடைபெறவுள்ளது. ஸ்டார்ட்அப் நிறுவனங்களுக்கு சர்வதேச அளவிலான ஆதரவை  இந்தியா திரட்டுகிறது. இந்தக் கூட்டத்தில் ஜி20 நாடுகளின் பிரதிநிதிகள், 9 சிறப்பு அழைப்பாளர்கள் மற்றும் இந்திய ஸ்டார்ட் அப் கூட்டமைப்பில் இடம்பெற்றுள்ள பன்னோக்கு நிறுவனங்களின் பிரதிநிதிகள் கலந்து கொண்டுள்ளனர்.

இந்தியா ஜி20 நாடுகளின் தலைமைத்துவத்தை ஏற்றபிறகு நடைபெறும் இந்தக் கூட்டத்தில் ஜி 20 நாடுகளின் அடுத்த சில ஆண்டுகளுக்கான உற்பத்தி வளர்ச்சி கொள்கை பரிந்துரைகள்  குறித்து விவாதிக்கப்படும்.

குறிப்பாக, கார்ப்பரேட் நிறுவனங்கள் முதலீட்டாளர்கள், புத்தாக்க ஏஜென்சிகள் ஆகியவற்றை ஒருங்கிணைத்து உலகளவில் ஸ்டார்ட் அப் நிறுவனங்களுக்கு ஆதரவை திரட்டுவது இந்தக் கூட்டத்தின் குறிக்கோளாக இருக்கிறது. 

**************

AP/ES/PK/KRS(Release ID: 1893655) Visitor Counter : 149


Read this release in: English , Urdu , Hindi , Telugu