ஜல்சக்தி அமைச்சகம்
azadi ka amrit mahotsav

2022 நவம்பர் மாதத்திற்கான ‘தண்ணீர் நாயகர்கள்: உங்களின் தனித்திறன்களைப் பகிருங்கள்’ போட்டியின் வெற்றியாளர்கள் அறிவிப்பு

Posted On: 25 JAN 2023 1:01PM by PIB Chennai

‘தண்ணீர் நாயகர்கள்: உங்களின் தனித்திறன்களைப் பகிருங்கள்' என்ற போட்டியை ஜல் சக்தி அமைச்சகத்தின் நீர் வளம், நதிகள் மேம்பாடு, கங்கை புனரமைப்புத் துறை தொடங்கியுள்ளது. தற்போது வரை மைகவ் (MyGov) தளத்தில் மூன்று போட்டிகள் நடத்தப்பட்டுள்ளன.

2022, நவம்பரில் நடத்தப்பட்ட போட்டியில் மூன்று பேர் வெற்றியாளர்களாக அறிவிக்கப்பட்டுள்ளனர். அவர்களுக்கு தலா ரூ. 10,000 ரொக்கப் பணம் மற்றும் சான்றிதழ் வழங்கப்படும். வெற்றியாளர்கள் குறித்த விவரம் பின்வருமாறு:

•     திரு பாபு பாஹுசாகேப் சலூன்கே:

மகாராஷ்டிர மாநிலம் நாசிக்கைச் சேர்ந்த இவர், 2019-ஆம் ஆண்டு தேசிய தண்ணீர் இயக்க விருதை வென்றுள்ளார். சொட்டுநீர் பாசனம் மற்றும் நுண்ணுயிர் பாசனத்தின் வாயிலாக தங்கள் வயல்களில் குறைந்த அளவிலான தண்ணீரைப் பயன்படுத்தவும், மழைநீர் சேகரிப்பு முறையை பின்பற்றவும் இவர் விவசாயிகளை ஊக்குவித்து வருகிறார்.

•     திருமிகு குன்குன் சவுத்ரி:

இவர் பானையை தண்ணீரை சேமிக்கும் சாதனமாக பயன்படுத்தினார்.  வெளிப்புறம் தண்ணீர் உறிஞ்சாத தன்மை கொண்ட இரட்டை அடுக்கு மண் பானையை பயன்படுத்தினார். இரண்டு அடுக்குகளுக்கு இடையே தண்ணீர் ஊற்றப்படுவதோடு இது உள் அடுக்கு வழியாக தேவைக்கேற்ப தாவரங்களுக்கு செல்கிறது. அதன் பிறகு இரண்டு அடுக்குகளுக்கு இடையே உள்ள இடைவெளி மூடப்பட்டு தண்ணீர் ஆவியாகாமல் தடுக்கப்படுகிறது.

•     திரு வைபவ் சிங்:

இந்திய வனத்துறை அதிகாரியான இவர், உத்தராகண்ட் மாநிலம் இமாலய மையப்பகுதியில் பணியாற்றுகிறார். பொறுப்பேற்றது முதல், மண்ணின் ஈரப்பதத்தின் பாதுகாப்பு கட்டமைப்பை இவர் உருவாக்கத் தொடங்கினார். நீர் குளங்கள், விளிம்பு அகழிகள், தடுப்பணைகள், துளையிடும் குழிகள் போன்ற பிற கட்டமைப்புகளும் இந்த சீரமைக்கப்பட்ட மற்றும் திட்டமிடப்பட்ட கட்டமைப்பு முறையில் அடங்கும்.

(Release ID: 1893530)

AP/RB/KRS(Release ID: 1893592) Visitor Counter : 31


Read this release in: English , Urdu , Hindi