அறிவியல் மற்றும் தொழில்நுட்பத்துறை
azadi ka amrit mahotsav

அறிவியல் மற்றும் தொழில்நுட்பத்துறைக்கு பொறுப்பு வகிக்கும் அமைச்சர் என்ற முறையில், தமது அமைச்சகத்தின் கீழ் உள்ள உயிரி தொழில்நுட்பத் துறையும் (டிபிடி) அதன் பொதுத்துறை நிறுவனமும், பாரத் பயோடெக் நிறுவனத்தின் மூலம் உலகின் முதல் மூக்கு வழியாக செலுத்தும் கொவிட் தடுப்பு மருந்து உருவாக்கத்தில் பெரும் பங்களிப்பை வழங்கியதில் பெருமிதம் கொள்கிறேன் : மத்திய இணை அமைச்சர் டாக்டர் ஜிதேந்திர சிங்

Posted On: 22 JAN 2023 5:14PM by PIB Chennai

உலகின் முதலாவது மூக்கு வழியாக செலுத்தும் கொவிட் தடுப்பூசி உருவாக்கத்திற்காக பயோ டெக் குழுவை மத்திய அறிவியல் மற்றும் தொழில்நுட்பத் துறை இணை அமைச்சர் திரு ஜிதேந்திர சிங் பாராட்டியுள்ளார்.

அறிவியல் மற்றும் தொழில்நுட்பத் துறை அமைச்சர் என்ற முறையில், அமைச்சகத்தின் கீழ் உள்ள உயிரித் தொழில்நுட்பத் துறை (டிபிடி) மற்றும் அதன் பொதுத்துறை நிறுவனமான பயோடெக்னாலஜி இண்டஸ்ட்ரி ரிசர்ச் அசிஸ்டன்ஸ் (BIRAC) ஆகியவை இந்த மூக்கு வழியாக செலுத்தும் தடுப்பு மருந்து உருவாக்கத்தில் பெரும் பங்களிப்பைச் செய்திருப்பது குறித்து பெருமைப்படுவதாகவும் அவர் கூறியுள்ளார். இதை சாத்தியமாக்கிய முழு புகழும் பிரதமர் திரு நரேந்திர மோடியைச் சேரும் என டாக்டர் ஜிதேந்திர சிங் கூறினார்.

மேலும் பிரதமர் திரு. நரேந்திர மோடியின் தனிப்பட்ட ஊக்கம் மற்றும் கண்காணிப்பு, கொவிட் தடுப்பூசி உற்பத்தியில் இந்தியா தற்சார்பை எட்ட உதவியதாகவும் இது  உலக அளவில் இந்தியாவின் அந்தஸ்தை உயர்த்தியது என்றும் அவர் தெரிவித்தார். இது ஒவ்வொரு இந்தியருக்கும் பெருமை அளிக்கும் விஷயம் என்று அவர் தெரிவித்தார்.

மூக்கு வழியாக செலுத்தும் தடுப்பு மருந்தின் தயாரிப்பு மேம்பாடு மற்றும் மருத்துவ பரிசோதனைகளுக்கு "மிஷன் கோவிட் சுரக்ஷா" இயக்கத்தின் கீழ் உயிரி தொழில்நுட்பத் துறை மற்றும் பிஐஆர்ஏசி மூலம் நிதியளிக்கப்பட்டது என்று அமைச்சர் கூறினார். இந்த தடுப்பூசி 18 வயது மற்றும் அதற்கு மேற்பட்ட வயதினருக்கான பயன்பாட்டின் கீழ் முதல் இரண்டு தவணை மற்றும் பூஸ்டர் டோஸ்களுக்கு ஒப்புதல் பெற்றுள்ளது என்றும் திரு ஜிதேந்திர சிங் தெரிவித்தார்.

*****

 

PKV / PLM / DL


(Release ID: 1892849) Visitor Counter : 186


Read this release in: English , Urdu , Hindi , Telugu