சுற்றுச்சூழல் மற்றும் வனத்துறை அமைச்சகம்
azadi ka amrit mahotsav

தில்லியின் ஒட்டுமொத்த காற்றின் தரத்தில் முன்னேற்றத்திற்கான வலுவான அறிகுறிகள்

இடுகை இடப்பட்ட நாள்: 22 JAN 2023 6:00PM by PIB Chennai

மத்திய மாசுக் கட்டுப்பாட்டு வாரியம்  வழங்கிய தகவிலின்படி, தில்லியின் ஒட்டுமொத்த காற்றின் தரம்  முன்னேற்றமடைந்துள்ளது. ஒட்டுமொத்த காற்றுத் தரக் குறியீடு இன்று 294-ல் இருந்து 113 புள்ளிகள் அதிகரித்து 407ஆக  அதிகரித்துள்ளது.

என்சிஆர் மற்றும் அதைச் சுற்றியுள்ள பகுதிகளில் காற்றுத் தர மேலாண்மை ஆணையத்தின்  தரப்படுத்தப்பட்ட செயல் திட்டத்தின்  கீழ் நடவடிக்கை எடுப்பதற்கான துணைக் குழு இன்று கூடியது.இந்த சந்திப்பின் போது, கடந்த 24 மணி நேரத்தில் இப்பகுதியில் காற்றின் தர அளவுருக்களில் ஏற்பட்ட மாற்றம் குறித்து ஆராயப்பட்டது.

இந்திய வானிலை ஆய்வு துறையின்  வானிலை முன்னறிவிப்பின்படி, தில்லியின் ஒட்டுமொத்த காற்றின் தரம் மேம்படத் தொடங்கும் என்பதற்கான வலுவான அறிகுறி உள்ளது. வரும் நாட்களில்  இது பெரும்பாலும் ஏற்ற இறக்கமாக இருக்கும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

*****

 

PKV / DL


(வெளியீட்டு அடையாள எண்: 1892847) வருகையாளர் எண்ணிக்கை : 196
இந்த வெளியீட்டை படிக்க: English , Urdu , हिन्दी , Telugu