சுகாதாரம் மற்றும் குடும்ப நலத்துறை அமைச்சகம்
azadi ka amrit mahotsav g20-india-2023

ஜி20 இந்திய தலைமைத்துவத்தின் கீழ், முதலாவது சுகாதாரப் பணிக்குழு கூட்டம் நிறைவு பெறுகிறது

Posted On: 20 JAN 2023 5:25PM by PIB Chennai

மருத்துவ மதிப்புப் பயணம் மூலம் சுகாதாரக் கண்காணிப்பு நடைமுறைகளில் ஏற்படும் பாதிப்புகள் மற்றும் பாகுபாடுகளைக் களைவதற்கு இன்றியமையாதது ஆகும் என்று நித்தி ஆயோக்கின்  சுகாதாரப் பிரிவு உறுப்பினர் டாக்டர் வி.கே பால் கூறியுள்ளார்  

கேரளாவின் திருவனந்தபுரத்தில் ஜி20 இந்திய தலைமைத்துவத்தின் கீழ், முதலாவது சுகாதாரப் பணிக்குழு கூட்டத்தின் 3-ஆம் நாள் நிகழ்வு இறுதி கட்டத்தை அடைந்துள்ளது. இதில் பேசிய, டாக்டர் வி.கே பால், மருத்துவ மதிப்புப் பயணத்துறையில் பாரம்பரிய மருத்துவ முறைகளில் ஒன்றான ஆயுர்வேதம் போன்றவற்றை பயன்படுத்துவதற்கு மிகப்பெரிய வாய்ப்பு ஏற்பட்டுள்ளது என்றும் ஆண்டு வளர்ச்சி விகிதம் 23 சதவீதமாக அமைந்திருப்பது குறிப்பிடத்தக்கது என்றும் அவர் கூறினார்.  அதே வேளையில் மருத்துவ மதிப்புப் பயண கட்டமைப்பை சிறந்த முறையில் உருவாக்க வேண்டிய அவசியத்தை அவர் வலியுறுத்தினார்.

தரமான, அதிக செலவில்லாத வகையில் மருத்துவ சேவைகள், வெளிப்படைத்தன்மையுடன் கூடிய விலை, மருத்துவ மதிப்பு பயண இலக்கை அடைவதற்கு தடையில்லாத வழிகள், உலகளவில் மருத்துவ சேவை மற்றும் சிகிச்சைக்காக அதிக காலம் காத்திருக்க வேண்டிய அவசியமில்லாமை போன்றவைகள் மிக முக்கியத்துவம் வாய்ந்தது என்றார்.

 

***

AP/GS/RJ/KRS



(Release ID: 1892543) Visitor Counter : 141


Read this release in: English , Urdu , Hindi , Malayalam