சிறப்பு சேவைகள் மற்றும் கட்டுரைகள்
azadi ka amrit mahotsav

சென்னை பழைய மகாபலிபுரம் சாலையில் உள்ள ஃபர்ஸ்ட் கிரை பொம்மைக் கடையில் பிஐஎஸ் அதிகாரிகள் நேற்று அதிரடிச் சோதனை - ஐஎஸ்ஐ முத்திரை இல்லாத பொம்மைகள் பறிமுதல்

இடுகை இடப்பட்ட நாள்: 18 JAN 2023 3:58PM by PIB Chennai

இந்திய தர நிர்ணய அமைவனத்தின், சென்னை கிளை அலுவலக அதிகாரிகள் குழுவினர் சென்னை பழைய மகாபலிபுரம் சாலையில் செம்மஞ்சேரியில் உள்ள  நார்த் ஸ்டார் நிறுவனங்களில் (ஃபர்ஸ்ட்கிரை) 17 ஜனவரி 2023 அன்று சோதனை மேற்கொண்டனர்.

அப்போது, ​​இந்திய தர நிர்ணய அமைவன சட்டத்தின் ஐஎஸ்ஐ முத்திரையில்லாமல் பொம்மைகள் விற்பனை செய்தது கண்டுபிடிக்கப்பட்டது.   இதில், மொத்தம் 48 பொம்மைகள் (47 மின்சாரம் அல்லாத பொம்மைகள், 1 மின்சார பொம்மை) பறிமுதல் செய்யப்பட்டன.

இந்திய தர நிர்ணய அமைவனம், சென்னை கிளை அலுவலகம் - I, இந்திய தர நிர்ணயச் சட்டம், 2016- இன் கீழ் குற்றத்திற்கு எதிரான நடவடிக்கையைத் தொடங்கியுள்ளது. குற்றத்தின் முதல் மீறலுக்கு பிஐஎஸ் சட்டம், 2016 இன் பிரிவு 29 இன் படி, இரண்டு ஆண்டுகள் வரை சிறைத்தண்டனை அல்லது ரூ. 2,00,000/-திற்கு குறையாத அபராதம் விதிக்கப்படும்

அல்லது பயன்படுத்தப்படும் பொருட்கள், தயாரிக்கப்பட்ட அல்லது விற்கப்படும் அல்லது ஒட்டப்படும் அல்லது பொருட்களின்

மதிப்பில் பத்து மடங்கு வரை நீட்டிக்கப்படலாம்.

எனவே, பொது மக்கள், எவரேனும் ஐஎஸ்ஐ முத்திரையைத் தவறாகப் பயன்படுத்துவது தெரிந்தால் , பிஐஎஸ் தெற்கு

மண்டல அலுவலகம், சிஐடி வளாகம், 4வது குறுக்கு சாலை, தரமணி, சென்னை-600 113 என்ற முகவரிக்கு தகவல் தெரிவிக்கலாம்.

BIS Care செயலியைப் பயன்படுத்தியோ அல்லது cnbo2@bis.gov.in  என்ற மின்னஞ்சல் முகவரிக்கு மின்னஞ்சல் அனுப்புவதன் மூலமாகவோ தகவல் தெரிவிக்கலாம். தகவல்களை தெரிவிப்பவர்களின்  ஆதாரம் கண்டிப்பாக ரகசியமாக வைக்கப்படும். பிஐஎஸ் இணையதளம் www.bis.gov.in  மற்றும் இ-பிஐஎஸ் (manakonline.in) ஆகியவை பிஐஎஸ் பற்றிய பொதுவான

தகவல்களுக்கு உங்களுக்கு உதவும்.

இந்த சோதனை/பறிமுதல் பற்றிய கூடுதல் தகவலுக்கு, அனுரீட்டா, விஞ்ஞானி-B, பிஐஎஸ், சென்னை கிளை அலுவலகம் - மொபைல்: 7011775932 என்ற எண்ணில் தொடர்பு கொள்ளவும்.

இத்தகவலை சந்தைப்பிரிவு மற்றும் நுகர்வோர் நலப்பிரிவு விவகார துணை இயக்குநர் திரு அஜய் கண்ணா தெரிவித்துள்ளார்.

***************

PKV/IR/RS/KRS

 


(வெளியீட்டு அடையாள எண்: 1891965) வருகையாளர் எண்ணிக்கை : 156
இந்த வெளியீட்டை படிக்க: English