சுரங்கங்கள் அமைச்சகம்

2022 நவம்பர் மாதத்தில் கனிம உற்பத்தி 9.7% அதிகரிப்பு

Posted On: 17 JAN 2023 6:24PM by PIB Chennai

கடந்த நவம்பர் மாதத்திற்கான கனிம உற்பத்தி குறியீடு 105.8 ஆக இருந்தது. இது முந்தைய ஆண்டின் அதே மாதத்துடன் ஒப்பிடுகையில், 9.7%  அதிகமாகும். 2022-23 ஏப்ரல் முதல் நவம்பர் காலகட்டத்தில் முந்தைய ஆண்டை விட 4.7% வளர்ச்சி காணப்பட்டது.

நவம்பர் மாதத்தில் நிலக்கரி உற்பத்தி 761 லட்சம் டன்னாக இருந்தது. பழுப்பு நிலக்கரி 32 லட்சம் டன்னாக இருந்தது. இயற்கை வாயு 2,779 மில்லின் கன மீட்டர். கச்சா பெட்ரோலியம் 24 லட்சம் டன். பாக்சைட் 2228 ஆயிரம் டன். குரோமைட் 243 ஆயிரம் டன். தங்கம் 132 கிலோ. இரும்பு தாது 231 லட்சம் டன். ஈயம் 30 ஆயிரம் டன். மாங்கனீஷ் தாது 274 ஆயிரம் டன். துத்தநாகம் 133 ஆயிரம் டன். சுண்ணாம்பு கல் 330 லட்சம் டன். வைரம் 28 கேரட், மேக்னிசைட் 9 ஆயிரம் டன்.

நவம்பர் மாதத்தில் முந்தைய ஆண்டை விட, வைரம் 87 % மும், பாக்சைட் 30 %மும், இரும்பு தாது 19%மும், நிலக்கரி 12 %மும், சுண்ணாம்பு கல் 8.6%மும், அதிகரித்துள்ளது. பெட்ரோலியம், இயற்கை வாயு, பழுப்பு நிலக்கரி, ஈயம், செம்பு, தங்கம், குரோமைட் ஆகியவை முந்தைய ஆண்டு  நவம்பர் மாதத்தை விட உற்பத்தி குறைந்துள்ளது.

***

PKV/RS/KRS



(Release ID: 1891841) Visitor Counter : 137


Read this release in: English , Urdu , Hindi , Punjabi