எரிசக்தி அமைச்சகம்
azadi ka amrit mahotsav

புதுப்பிக்கத்தக்க எரிசக்தி வளர்ச்சியில் கூட்டாண்மைக்காக திரிபுரா அரசுடன் தேசிய அனல்மின் கழகத்தின் புதுப்பிக்கத்தக்க எரிசக்தி நிறுவனம் புரிந்துணர்வு ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டுள்ளது

प्रविष्टि तिथि: 16 JAN 2023 5:02PM by PIB Chennai

 

 

புதுப்பிக்கத்தக்க எரிசக்தி வளர்ச்சியில் கூட்டாண்மைக்காக திரிபுரா அரசுடன் தேசிய அனல்மின் கழகத்தின் புதுப்பிக்கத்தக்க எரிசக்தி நிறுவனம் புரிந்துணர்வு ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டுள்ளது.

தேசிய அனல் மின் கழகத்தின் புதுப்பிக்கத்தக்க நிறுவனத்தின் தலைமை பொதுமேலாளர் திரு ராஜீவ் குப்தா, திரிபுரா புதுப்பிக்கத்தக்க எரிசக்தி வளர்ச்சி ஆணையத்தின்  தலைமை செயல் அதிகாரியும், தலைமை இயக்குனருமான திரு மகாநந்தா டெப்பார்மாவும் இதற்கான ஒப்பந்தத்தில்  கையெழுத்திட்டனர்.

இந்த ஒப்பந்தத்தின் மூலம் பெரிய அளவிலான புதுப்பிக்கத்தக்க எரிசக்தித் திட்டங்களை திரிபுரா மாநிலத்தில் நிறைவேற்ற முடியும். அத்துடன், தூய்மை எரிசக்தி தேவைகளுக்கும், கடமைகளுக்கும் உதவ முடியும்.

***

SG/IR/RS/KRS


(रिलीज़ आईडी: 1891628) आगंतुक पटल : 244
इस विज्ञप्ति को इन भाषाओं में पढ़ें: English , Urdu , हिन्दी , Manipuri