சுகாதாரம் மற்றும் குடும்ப நலத்துறை அமைச்சகம்
azadi ka amrit mahotsav

“உலகளாவிய மூன்றாம் உலக நாடுகளின் குரல் உச்சிமாநாடு- 2023”-ல் வலுவான சுகாதார கவனிப்பு முறைகளை கட்டமைப்பதற்கான ஒத்துழைப்பு என்ற தலைப்பில் நடைபெற்ற மெய்நிகர் அமர்வுக்கு மத்திய சுகாதாரத் துறை அமைச்சர் டாக்டர் மன்சுக் மாண்டவியா தலைமை தாங்கினார்

प्रविष्टि तिथि: 13 JAN 2023 5:09PM by PIB Chennai

அனைவருக்கும் உயர்தரமான குறைந்த செலவில் சுகாதார வசதிகளை வழங்குவதற்கு இந்தியா தொடர்ந்து பாடுபடுகிறது என்று மத்திய சுகாதார மற்றும் குடும்பநலத்துறை அமைச்சர் டாக்டர் மன்சுக் மாண்டவியா தெரிவித்துள்ளார். “உலகளாவிய மூன்றாம் உலக நாடுகளின் குரல் உச்சிமாநாடு- 2023”-ல் வலுவான சுகாதார கவனிப்பு முறைகளை கட்டமைப்பதற்கான ஒத்துழைப்பு என்ற தலைப்பில் நடைபெற்ற மெய்நிகர் அமர்வுக்கு தலைமை தாங்கிய அமைச்சர், வலுவான சுகாதார நடைமுறைகளை கட்டமைப்பதற்கு நீண்ட கால நடவடிக்கைகளில் கவனம் செலுத்துவது காலத்தின் தேவை என்றார். இது சுகாதாரம் தொடர்பான எதிர்கால சவால்களுக்கு தேவையானவற்றை உருவாக்க உதவும் என்று அவர் கூறினார்.

உலகளாவிய மூன்றாம் உலக நாடுகளின் குரல் முதல் ஜி20 வரையிலான மற்றும் இதர சர்வதேச அமைப்புகளில் அங்கம் வகித்து நமது வளர்ச்சிப் பயணத்தை மேற்கொள்கிறோம் என்று அவர் குறிப்பிட்டார். ஒருங்கிணைந்த இத்தகைய முயற்சிகள், உலக அளவில் குறிப்பாக, மூன்றாம் உலக நாடுகளில் சுகாதார சமத்துவத்தை உறுதி செய்யும் என்று மத்திய அமைச்சர் டாக்டர் மன்சுக் மாண்டவியா தெரிவித்தார்.

1.3 மில்லியன் அலோபதி மருத்துவர்கள், 3.4 மில்லியன் செவிலியர்கள், 8 லட்சம் ஆயுஷ் (ஆயுர்வேதம், யோகா, இயற்கை வைத்தியம், யுனானி, சித்தா, ஹோமியோபதி) மருத்துவர்கள் ஆகியோருடன் மூன்றாம் உலக நாடுகள் உட்பட அனைத்து நாடுகளையும் சேர்ந்த நோயாளிகளுக்கு தேவையான தரமான மற்றும் குறைந்த செலவிலான மருத்துவ வசதியை இந்தியா வழங்குவதாக அவர் தெரிவித்தார்.

இந்த அமர்வில் பங்கேற்ற பிரமுகர்கள், அனைவரையும் உள்ளடக்கிய அணுகுமுறையின் தேவையை வலியுறுத்தினர். சுகாதார கவனிப்பில் டிஜிட்டல் முறையிலான பொதுநன்மையை மேம்படுத்துதல், பாரம்பரிய மருந்துகளை ஊக்கப்படுத்துதல், மண்டல வாரியான குவிமையங்களை உருவாக்குதல், மருத்துவ அறிவை பகிர்ந்துகொள்ளுதல் ஆகியவற்றுக்கான வழிமுறைகள் பற்றியும் விவாதிக்கப்பட்டது.

இந்த அமர்வில், செயின்ட் கிட்ஸ் மற்றும் நேவிஸ் கூட்டமைப்பு, பூட்டான், கேமரூன், கிரனெடா, கௌதமாலா, லைபிரியா, மலாவி, நைஜர், பிராக்வே, டொமினிக்கா ஆகிய நாடுகளைச் சேர்ந்த பிரமுகர்கள் கலந்துகொண்டனர்.

***

AP/SMB/RS/RJ


(रिलीज़ आईडी: 1891059) आगंतुक पटल : 325
इस विज्ञप्ति को इन भाषाओं में पढ़ें: English , Urdu , हिन्दी