சிறப்பு சேவைகள் மற்றும் கட்டுரைகள்
azadi ka amrit mahotsav

இந்திய தபால் மற்றும் இந்திய ரயில்வே இணைந்து கூட்டு பார்சல் விநியோக முறையைத் தொடங்கியது

Posted On: 12 JAN 2023 1:43PM by PIB Chennai

இந்திய தபால் மற்றும் இந்திய ரயில்வே இணைந்து கூட்டு பார்சல் விநியோக முறையைத் தொடங்கியது.  அதன்படி, 35 கிலோவுக்கு மேற்பட்ட எடையிலான பார்சலை வாடிக்கையாளரின் இருப்பிடத்திலிருந்து பெற்றுக்கொண்டு ரயில் நிலையத்திற்கு அனுப்ப உள்ளது. பின்னர், பார்சல் சென்று சேர்ந்த ரயில் நிலையத்திலிருந்து, அதனைப் பெறும் வாடிக்கையாளரின் இருப்பிடத்திற்கே கொண்டு விநியோகம் செய்யும் பணியை இந்திய தபால் துறை மேற்கொள்ள உள்ளது. இந்த கூட்டு பார்சல் விநியோக சேவையைப் பெறும் வாடிக்கையாளர்களுக்கு நியாயமான கட்டணத்தில் 3-ம் நபர் காப்பீடு கட்டாயமாக்கப்பட்டுள்ளது.

பார்சலைப் பெற்றுக் கொண்டது முதல் அதை  விநியோகம் செய்யும் வரை வாடிக்கையாளருக்கான தொடர்பு அலுவலகமாக இந்திய தபால் அலுவலகம் இருக்கும்.

சென்னைநகர பிராந்தியத்தில் இத்திட்டத்தின் கீழ் ராணிப்பேட்டையிலிருந்து திருமானூருக்கு பார்சல் 07.12.2022 அன்று அனுப்பப்பட்டது. ராணிப்பேட்டையில் பெறப்பட்ட அந்த பார்சல் திருச்செந்தூர் எக்ஸ்பிரஸ் ரயில் மூலம் திருச்சி ரயில் நிலையத்திற்கு அனுப்பப்பட்டது. பின்னர் அந்த பார்சல் 08.12.2022 அன்று வாடிக்கையாளரின் இருப்பிடத்தில் விநியோகம் செய்யப்பட்டது. 

இச்சேவையை பெற விரும்புவோர் உதவி இயக்குநர், (வர்த்தக மேம்பாடு) சென்னை நகர பிராந்தியத்தில் உள்ள உதவி இயக்குநரை அணுகலாம். அல்லது 044 -2859 4761 /044 -2859 4762 / 94449 75512 என்ற எண்ணை தொடர்பு கொள்ளலாம். மேலும் bd.chennaicity@indiapost.gov.in என்ற இணையதளத்தைக் காணலாம். இத்தகவலை சென்னை நகர தலைமை அஞ்சல்நிலைய அதிகாரி தெரிவித்துள்ளார். 

***************

SM/IR/KPG/PK


(Release ID: 1890660) Visitor Counter : 228
Read this release in: English