சிறப்பு சேவைகள் மற்றும் கட்டுரைகள்
azadi ka amrit mahotsav g20-india-2023

சென்னை ஓ.எம் .ஆர் (OMR) சாலையில் உள்ள பொம்மைக் கடையில் பிஐஎஸ் அதிகாரிகள் நேற்று இரவு அதிரடிச் சோதனை - ஐஎஸ்ஐ முத்திரை இல்லாத அதிக அளவிலான பொம்மைகள் பறிமுதல்

Posted On: 12 JAN 2023 1:00PM by PIB Chennai

இந்திய தர நிர்ணய அமைவனம், சென்னை கிளை அலுவலக அதிகாரிகள் குழு 11 ஜனவரி 2023 அன்று இரவு  சென்னை .எம் .ஆர் (OMR) சாலையில்  அமைந்துள்ள ரிட்ஸ் டிரேட் லிங்க்ஸ் பிரைவேட் லிமிடெட், கிட்ஸோன், ராஜீவ் காந்தி சாலை, ஓஎம்ஆர், துரைப்பாக்கம், சென்னை – 600097 இல் BIS சட்டம், 2016 மீறுவதாகக் கிடைத்தத் தகவலின் அடிப்படையில், அமலாக்கச் சோதனை நடத்தப்பட்டது.

இந்த சோதனையின் போது, இந்திய தர நிர்ணய அமைவன  சட்டம் 2016 பிரிவு 28 இன் படி, கடைகளில்  பிஐஎஸ் ஸ்டாண்டர்ட் மார்க் (ஐஎஸ்ஐ மார்க்) இல்லாமல் பொம்மைகள் விற்பனை செய்யப்பட்டது கண்டுபிடிக்கப்பட்டது. பிஐஎஸ் ஸ்டாண்டர்ட் மார்க் (ஐஎஸ்ஐ மார்க்) இல்லாத மொத்தம் 817 பொம்மைகள் (480 மின்சாரம் அல்லாத பொம்மைகள்- மென்மையான பொம்மைகள், பிளாஸ்டிக் வார்ப்பு பொம்மைகள், புதிர் விளையாட்டு பொம்மைகள் போன்ற மின்சாரம் அல்லாத பொம்மைகள் மற்றும் 337 எலக்ட்ரிக் பொம்மைகள் - பேட்டரி மூலம் இயக்கப்படும் பொம்மைகள், ரிமோட் கண்ட்ரோல்டு பொம்மைகள் ஆகிய மின்சார பொம்மைகள்/கார் முதலியன ) பறிமுதல் செய்யப்பட்டன. அரசால் வெளியிடப்பட்ட பொம்மைகள் (தரக்கட்டுப்பாடு) ஆணை, 2020-ன் படிஇந்தியாவில் தயாரிக்கப்பட்ட, இறக்குமதி செய்யப்பட்ட, விநியோகிக்கப்பட்ட, விற்கப்படும், வாடகைக்கு எடுக்கப்பட்ட, குத்தகைக்கு விடப்பட்ட, சேமித்து வைக்கப்பட்ட அல்லது விற்பனைக்காகக் காட்டப்படும் அனைத்து பொம்மைகளும் BIS ஆல் கட்டாயமாக தரச் சான்றளிக்கப்பட்டு BIS ஸ்டாண்டர்ட் மார்க் பெற்றிருக்க வேண்டும். எனவே, இவ் வர்த்தகர் பொம்மைகள் (தரக் கட்டுப்பாடு) ஆணை, 2020 மீறியதன் மூலம், BIS சட்டம் 2016 இன் பிரிவு 16 மற்றும் 17 மீறியிருப்பதும் கண்டுபிடிக்கப்பட்டது.

            இந்திய தர நிர்ணய அமைவனம், சென்னை கிளை அலுவலகம் - I, இந்திய தர நிர்ணயச் சட்டம், 2016 இன் கீழ் குற்றவாளிக்கு எதிராக நடவடிக்கையைத் தொடங்கியுள்ளது. இந்தக் குற்றத்திற்கு, முதல் மீறலுக்கு BIS சட்டம், 2016 இன் பிரிவு 29 இன் படி, இரண்டு ஆண்டுகள் வரை சிறைத்தண்டனை அல்லது ரூ. 2,00,000/- இதற்கு குறையாத அபராதம் விதிக்கப்படும் அல்லது பயன்படுத்தப்படும் பொருட்கள், தயாரிக்கப்பட்ட அல்லது விற்கப்படும் அல்லது ஒட்டப்படும் அல்லது பொருட்களின் மதிப்பில் பத்து மடங்கு வரை நீட்டிக்கப்படலாம்.

            எனவே, பொதுமக்கள், எவரேனும் ஐஎஸ்ஐ முத்திரையைத் தவறாகப் பயன்படுத்துவது தெரியவந்தால், பிஐஎஸ் தெற்கு மண்டல அலுவலகம், சிஐடி வளாகம், 4வது குறுக்கு சாலை, தரமணி, சென்னை-600 113 என்ற முகவரிக்கு தகவல் தெரிவிக்கலாம். BIS Care  செயலியைப் பயன்படுத்தியோ  அல்லது cnbo1@bis.gov.in என்ற மின்னஞ்சல் முகவரிக்கு மின்னஞ்சல் அனுப்புவதன் மூலமாகவோ தகவல் தெரிவிக்கலாம். அத்தகைய தகவல்களின் ஆதாரம் கண்டிப்பாக ரகசியமாக வைக்கப்படும். BIS இணையதளம் www.bis.gov.in மற்றும் e-BIS (manakonline.in) ஆகியவை BIS பற்றிய பொதுவான தகவல்களுக்கு உங்களுக்கு உதவும்.

இந்த சோதனை/பறிமுதல் பற்றியக் கூடுதல் தகவலுக்கு, ஜ்யோத்ஸ்னா பிரியா, விஞ்ஞானி-B, பிஐஎஸ், சென்னை கிளை அலுவலகம் -  Mobile: 6302653054 என்ற எண்ணில் தொடர்பு கொள்ளவும்.

 ***************  

    

 

    

 

    

 

 



(Release ID: 1890648) Visitor Counter : 136


Read this release in: English