சிறப்பு சேவைகள் மற்றும் கட்டுரைகள்

76-வது நிறுவன தினத்தையொட்டி நுகர்வோருக்கு விழிப்புணர்வை ஏற்படுத்த இந்திய தர நிர்ணய அமைவனம் மூன்று நாட்களுக்கு பல்வேறு நிகழ்ச்சிகளை நடத்துகிறது

Posted On: 06 JAN 2023 12:45PM by PIB Chennai

இந்திய தர நிர்ணய அமைவனம் (பிஐஎஸ்) என்பது இந்திய அரசின் நுகர்வோர் விவகாரங்கள், உணவு மற்றும் பொது விநியோக அமைச்சகத்தின் கீழ் செயல்படும் ஒரு சட்டரீதியான அமைப்பாகும். இது பொருள்களுக்கான தர உரிமம் (ஐஎஸ்ஐ மார்க்), மேலாண்மை திட்ட சான்றிதழ், தங்கம் மற்றும் வெள்ளி நகைகள்/கலைப் பொருள்களுக்கான ஹால்மார்க் உரிமம் மற்றும் ஆய்வகச் சேவைகளின் நலன் மற்றும் நுகர்வோர் பாதுகாப்பை நோக்கமாகக் கொண்ட பல்வேறு திட்டங்களை செயல்படுத்துகிறது.

தேசத்திற்கு சேவை செய்வதில் பிஐஎஸ்  75 புகழ்பெற்ற ஆண்டுகளை நிறைவு செய்து இன்று, (06 ஜனவரி 2023)  76-வது ஆண்டில் அடியெடுத்து வைத்துள்ளது . பிஐஎஸ் நிறுவன தினத்தை நினைவுகூரும் வகையில், இன்று, நாளை மற்றும் நாளை மறுநாள் பல்வேறு நிகழ்ச்சிகள் நடத்தப்படுகின்றன.

தர நியமங்கள் மற்றும் தரம் குறித்த விழிப்புணர்வை பொதுமக்களிடம் உருவாக்குவதற்காக இன்று                         7 கல்லூரிகளைச் சேர்ந்த மாணவர்கள் (மானக் மித்ரா), பொதுமக்களின் வீடுகளுக்குச் சென்று, அவர்களுக்கு தரம் பற்றிய விழிப்புணர்வை ஏற்படுத்துவர். இன்று காலை எஸ்ஆர்எம் ஈஸ்வரி பொறியியல் கல்லூரியில், பிஐஎஸ் தென் மண்டல துணைத் தலைமை இயக்குநர்  திரு யுஎஸ்பி யாதவ்  கொடியேற்றி , விழாவை துவக்கி வைத்தார் . எஸ்ஆர்எம் ஈஸ்வரி பொறியியல் கல்லூரி; டிஜி வைஷ்ணவ் கல்லூரி; எஸ்ஆர்எம் இன்ஸ்டிடியூட் ஆப் சயின்ஸ் அண்ட் டெக்னாலஜ;, ராமாபுரம் & எஸ்ஆர்எம் இன்ஸ்டிடியூட் ஆஃப் சயின்ஸ் அண்ட் டெக்னாலஜி, பொத்தேரி ; சண்முகா தொழில்துறை கலை மற்றும் அறிவியல் கல்லூரி; ஸ்டெல்லா மேரிஸ் கல்லூரி; ஆறுபடை வீடு தொழில்நுட்பக் கல்லூரி மாணவர்கள் பிஐஎஸ் சார்பாக தர இணைப்பு  பிரச்சாரத்தை மேற்கொள்வர். இவர்கள் பொதுமக்களின் வீடுகளுக்குச் சென்று, பிஐஎஸ் செயல்பாடுகள் பற்றிய தகவல்களை பகிர்ந்து கொள்வார்கள்.

தர நியமங்கள்  மற்றும் தரம் குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்துவதற்காக பிஐஎஸ் வீதி நாடகங்களையும், புகழ்பெற்ற கூத்துப்பட்டறை அமைப்பு மூலம்  நடத்துகின்றது. இந்த வீதி நாடகங்கள் பெசன்ட் நகர் கடற்கரை, மெரினா கடற்கரை, கிண்டி தேசிய பூங்கா, வண்டலூர் உயிரியல் பூங்கா மற்றும் மாமல்லபுரம் கடற்கரை போன்ற முக்கிய இடங்களில் இன்றும், நாளையும், நாளை மறுநாளும்   நடத்தப்படுகின்றன.

76-வது நிறுவன நாளான இன்று, பிஐஎஸ் தென் மண்டல அலுவலகத்தில் ஊழியர்களுக்காக பல்வேறு கலை மற்றும் விளையாட்டு நிகழ்ச்சிகளும் நடத்தப்படுகின்றன.

  

 

  

***************



(Release ID: 1889117) Visitor Counter : 108


Read this release in: English